Nandagopal Rajan
ஃபோன் பிரியர்களுக்கு தான் இந்த செய்தி.. ஒன்பிளஸ் குறித்த தெளிவான விளக்கங்கள் உங்களுக்காக. ஒன்பிளஸ்வாங்க விருப்பப்படுபவர்கள் இந்த செய்தியை வாசித்த பின்பு போய் ஃபோன் வாங்குவது பலன் தரும்.
மக்கள் அதிகம் எதிர்பார்த்த கிளாசி பட்ஜெட் போனான OnePlus Nord அறிமுகம் ஆகியுள்ளது. ஒன்பிளஸ் அபிமானிகள், இந்த புதிய போன் வரவை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய போனின் மூலம், ஸ்மார்ட்போன் உலகில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடந்தாண்டு வரை, ஒன்பிளஸ் போன்களுக்கு மக்களிடையே போதிய வரவேற்பு கிடைத்திராத நிலையில், இந்தியாவில் ஒன்பிளஸ் போன்கள் அறிமுகமான நிலையில் மக்களிடையே நன்மதிப்பை பெற்றது. இந்த வாய்ப்பை தனதாக்கிக்கொண்ட ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்தடுத்த காலாண்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்தி மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ற வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தீர்மானித்தது. அதன் விளைவாக உருவானதே OnePlus Nord.
OnePlus Nord போனின் டிசைன் மற்றும் டிஸ்பிளே
நாம் இதற்குமுன் ஒன்பிளஸ் போனில் பயன்படுத்திய அனைத்து சிறப்பம்சங்களும், இந்த OnePlus Nord போனில் இடம்பெற்றுள்ளது. போனின் டிசைனில் எவ்வித மாற்றமும் இல்லை.அதே லுக், ஒன்பிளஸ் 8 சீரிஸ் போனை பயன்படுத்தியது போன்று இருந்தது. ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால், இதற்குமுன் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தியிருந்த போன்களில், கேமரா மாட்யுல் போனின் நடுப்பகுதியில் இருந்த நிலையில், OnePlus Nord போனில், அது இடது ஓரம் அமைந்துள்ளது. ஆனால் போன் டிசைன்களில் எவ்வித மாறுதலும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த போன், ஒன்பிளஸ் 8 சீரிஸை ஒத்திருந்தாலும், அதைக்காட்டிலும், இந்த போன் சற்று உயரமாக உள்ளது. ஒன்பிளஸ் போனின் அனைத்து சிறப்பம்சங்களும் ஒருங்கே அமைக்கப்பெற்று OnePlus Nord உருவாக்கப்பட்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே மீண்டும் இதில் இடம்பெற்றுள்ளது. 6.44 இஞ்ச் புளுயிட் அமோலெட் டிஸ்பிளே, பார்ப்பவர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறது. ஒன்பிளஸ் 8 புரோ போனைவிட , இந்த போன் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகவும் உள்ளது.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் போனை, இது அதிகளவில் ஒத்துள்ளது. OnePlus Nord போனில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி புராசசர் 855 சிப்செட் போனின் மேற்புறத்தில் இடம்பெறவில்லை. 12 ஜிபி ராம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் அளவுகளில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போன் 5ஜி வசதியை சப்போர்ட் பண்ணும் என்றாலும், இந்தியா இன்னும் 5ஜி நாடாக மாறவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய செய்தி தான்...
OnePlus Nord போனில், ஆக்சிஜன் ஆபரேடிங் சிஸ்டமும், ஆண்ட்ராய்ட் 10 உடன் பயனாளர்களுக்கு புதுவித அனுபவத்தை தருகிறது.
கேமரா
OnePlus Nord போனில், இரண்டு செல்பி கேமரா செட் அப் உள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி வைடு ஆங்கிள் காம்போ உள்ளது. பின்புறத்தில், 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி, 5 எம்பி மற்றும் 2 எம்பி என நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் ஒன்று கலர் பில்டர் லென்ஸ் ஆக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் அல்ட்ரா வைடு 0.6 எக்ஸ் மற்றும் 2எக்ஸ் டெலிபோட்டோ ஆப்டிகல் ஜூம் வசதியும் உள்ளது. செல்பி வசதி ரெகுலர் மற்றும் வைடு என்ற இரு பிரிவுகளில் உள்ளது.
கேமராவில், புரோ மோடு பகுதியில் அனைத்து செட்டிங்களையும் மாற்றிக்கொள்ளலாம். இதனுள் புதிய கலர் பில்டர்கள் அதிகம் உள்ளன. ஆனால், போட்டோகிராம் இதில் இடம்பெறவில்லை. ஒன்பிளஸ் 8 சீரிசில் உள்ளதுபோல் இதில், மேக்ரோ மோடு வசதி உள்ளது.
பேட்டரி திறன்
OnePlus Nord போனில் உள்ள 4115 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் தங்குதடையின்றி போனை பயன்படுத்தலாம். இந்த பேட்டரியை 30 நிமிடங்களில் முழுசார்ஜ் ஏற்றலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
முதல் பதிவு
ரூ.24,999 விலையில் இருந்து OnePlus Nord போன் துவங்குகிறது. 12 ஜிபி ராம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.29,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போனின் ஓரத்தில் பல்வேறு பகுதிகள் மாயமாகியுள்ளன. இந்த நேரத்தில் இத்தனை விலைகுறைவாக ஒரு போன் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.