இந்தியாவில் OnePlus Nord pre-order துவக்கம் – இதோ நீங்களும் புக் செய்யுங்க..

OnePlus Nord pre book : முதல் கிப்ட் பாக்ஸில் முன்னணி நிறுவனங்களின் வவுச்சர்களும், இரண்டாவது பாக்சில், ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் வி1 மற்றும் போன் கவர் இருக்கும்

By: July 17, 2020, 8:02:55 AM

ஒன்பிளஸ் நிறுவனம், இந்தியாவில் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனை, வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனுக்கான pre-order, தற்போது அமேசானில் துவங்கி நடைபெற்று வருகிறது. ரூ.499 செலுத்தி, நீங்கள் அமேசானில், OnePlus Nord ஸ்மார்டபோனை pre-order செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு, ரூ.5 ஆயிரம் வரை மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் OnePlus Nord ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவருக்கும் நிறுவனம் சார்பில் 2 கிப்ட் பாக்ஸ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கிப்ட் பாக்ஸில் முன்னணி நிறுவனங்களின் வவுச்சர்களும், இரண்டாவது பாக்சில், ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் வி1 மற்றும் போன் கவர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் சேனலுக்கு ஒன்பிளஸ் சிஇஓ கார் பெய், OnePlus Nord ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், அதன் வசதிகள் குறித்து தெளிவாக கூறியதாவது, அதன் பின்புற வளைவான பகுதி, வலது ஓரத்தில், நான்கு கேமராக்கள் செட்அப் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. முன்பக்கத்தில், இடது ஓரத்தில் இரட்டை துளை பஞ்ச் அனைவரையும் கவரும். அலர்ட் ஸ்லைடர், வலது ஓரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வலது மேற்பக்கத்தில் பவர் பட்டன் உள்ளது. OnePlus Nord ஸ்மார்ட்போன், கிரே, மற்றும் டியல் புளு வண்ணங்களில் வெளியாக உள்ளது.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒன் பிளஸ் கம்பெனி விரைவில் உண்மையான வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. புளு மற்றும் பிளாக் வண்ணங்களில் வெளியாக உள்ள இந்த ஹெட்போன்கள், 30 மணிநேரம் நீடிக்கத்தக்க பேட்டரியுடன் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

OnePlus Nord : எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

OnePlus Nord ஸ்மார்ட்போன், 765G 5G குவால்காம் ஸ்னாப்டிரான் பிராசசருடன் வரவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. தற்போது கூடுதல் அம்சமாக இதன் டிஸ்பிளே 90Hz அமோலேட் பேனலுடன் வரஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த போன் நீர்புகா தன்மையுடனும், விளையாட்டு வீரர்கள் அதிகம் விரும்பும் சிறப்பம்சங்களுடனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின்படி, OnePlus Nord ஸ்மார்ட்போன், 6.44 அங்குள்ள முழு ஹெச்டி அமோலெட் டிஸ்பிளேவுடனும், 8GB RAM/128GB storage மற்றும் 12GB RAM/256GB storage என இரு வகைகளில் .வெளியாகும். OnePlus Nord ஸ்மார்ட்போன், கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் வரவான ஆண்ட்ராய்ட் 10 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்க உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 4,110 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் Warp Charge 30Tக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

OnePlus Nord ஸ்மார்ட்போன், நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. பிரைமரி சென்சாருடன் கூடிய 48 எம்பி பின்பக்க கேமரா, 8எம்பி அல்ட்ரா ஆங்கிள் வைட் சென்சார் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் கேமரா மற்றும் மேக்ரோ லென்சுடன் கூடிய 2 எம்பி கேமரா உள்ளடக்கியது. முன்பக்கத்தில் பிரைமரி சென்சாருடன் கூடிய 32 எம்பி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா இதன் சிறப்பம்சமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Oneplus nord pre order nord pre book oneplus nord specs specifications

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X