12,140mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்.. கேமிங் பிரியர்களுக்காக் ஒன்பிளஸ் பேட் 3 அறிமுகம்!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், தனது புதிய டேப்லெட்டான ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) இந்தியாவில் செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், தனது புதிய டேப்லெட்டான ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) இந்தியாவில் செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
OnePlus Pad 3

12,140mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்... கேமிங் பிரியர்களுக்காக் ஒன்பிளஸ் பேட் 3 அறிமுகம்!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், தனது புதிய டேப்லெட்டான ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) இந்தியாவில் செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒன்பிளஸ் 13எஸ் வெளியீட்டு விழாவில் இந்த டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டாலும், விற்பனை தேதி இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

Advertisment

லீக் தகவல்கள் படி, ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் விலை சுமார் ரூ. 50,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த டேப்லெட், வெறும் 5.97 மி.மீ தடிமனுடன், மெல்லிய மெட்டல் யூனிபாடி டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃப்ராஸ்டட் சில்வர் மற்றும் ஸ்டார்ம் ப்ளூ ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் இது வைஃபை-மட்டும் (Wi-Fi–only) மாடலாகவே கிடைக்கும் என்பதால் சிம் கார்டு வசதி இதில் இருக்காது.

ஒன்பிளஸ் பேட் 3, 13.2 இன்ச் 3.4K (2,400×3,392 பிக்சல்கள்) LCD திரையைக் கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 nits (அதிகபட்சம் 900 nits), 540Hz டச் சாம்ப்ளிங் ரேட், கண் பாதுகாப்பு TÜV Rheinland Eye Care 4.0 சான்றிதழ், கலர் டெப்த்12-bit, சிறப்பம்சம் Dolby Vision HDR, Hi-Res Audio, LHDC சப்போர்ட்டுடன் கூடிய எட்டு ஸ்பீக்கர் அமைப்பு

இந்த டேப்லெட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் மொபைல் பிளாட்பார்ம் (Qualcomm Snapdragon 8 Elite Mobile Platform) சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த சிப்செட் பயன்படுத்தப்பட்ட முதல் டேப்லெட் இதுதான் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. முந்தைய சிப்செட்டை விட 45% வேகமான சிபியூ, 40% வேகமான ஜிபியூ மற்றும் 300% வேகமான என்பிபியூ (NPU) திறன் கொண்டது.

Advertisment
Advertisements

AnTuTu-ல் 2,947,633 என்ற அற்புதமான ஸ்கோரைப் பெற்றுள்ளது. அட்ரினோ 830 ஜிபியூ (Adreno 830 GPU) கிராபிக்ஸ், 120fps-ல் கேமிங் விளையாட முடியும். ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 15-ல் இயங்குகிறது. 16GB வரை LPDDR5T ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. பின்புற கேமரா: 13 மெகாபிக்சல், முன்புற கேமரா: 8 மெகாபிக்சல், 12,140mAh பேட்டரி, பேட்டரி ஆயுள்: 18 மணி நேரம் வீடியோ பார்க்கும் திறன், 6 மணி நேரம் கேமிங் விளையாடும் திறன். 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: