ஒன்பிளஸ் தனது 2-வது ஆண்ட்ராய்டு டேப்லெட்டான பேட் கோ-வை அக்டோபர் 6-ம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸின் புதிய டேப்லெட் பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது மற்றும் தற்போதைய ஒன்பிளஸ் பேடை விட கணிசமாக விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் பேட் கோ curved frame வடிவத்தில் இருக்கும் மற்றும் "ட்வின் மிண்ட்" எனப்படும் மேட் மற்றும் பளபளப்பான க்ளாஸி ஃபினிஸ் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் பச்சை நிறத்தில் டேப்லெட் அறிமுகமாகிறது.
மேலும் டேப்லெட் குவாட்-ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் ஒரு பெரிய டிஸ்ப்ளே மற்றும் 2K தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் யூனிபாடி வடிவமைப்பை வழங்க வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓ.எஸ் 14 உடன் இயங்குகிறது. ஒன்பிளஸ் பேட் கோ ரூ.30,000 வரையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“