ஸ்டூடெண்ட், பேமிலி, பொழுதுபோக்கு... OnePlus Pad Lite ஆல்-இன்-ஒன் டேப்லெட் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மலிவு விலை டேப்லெட்டான OnePlus Pad Lite-ஐ இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மலிவு விலை டேப்லெட்டான OnePlus Pad Lite-ஐ இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
one plus pad lite

ஸ்டூடெண்ட்ஸ், பேமிலி, என்டர்டெயின்மென்ட்... OnePlus Pad Lite ஆல்-இன்-ஒன் டேப்லெட் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மலிவு விலை டேப்லெட்டான OnePlus Pad Lite-ஐ இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. பொழுது போக்கு மற்றும் உற்பத்தித்திறனை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட், பெரிய திரை, துல்லியமான ஆடியோ மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுளுடன் வெளிவந்துள்ளது.

Advertisment

OnePlus Pad Lite டேப்லெட் 11 இன்ச் Full HD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது, மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இதன் தடிமன் 7.39 மிமீ மற்றும் எடை சுமார் 530 கிராம். இது Aero Blue நிறத்தில் கிடைக்கிறது. TÜV Rheinland சான்றிதழ்களுடன் கூடிய இந்த டிஸ்ப்ளே, குறைந்த நீல ஒளியுடன் கண்களுக்கு சோர்வை குறைக்கிறது. OnePlus Pad Lite 2 வகைகளில் கிடைக்கிறது. Wi-Fi மாடல்: 6GB ரேம்+128GB சேமிப்பகத்துடன் இதன் விலை ரூ. 12,999, Wi-Fi + 4G LTE மாடல் 8GB ரேம்+128GB சேமிப்பகத்துடன் இதன் விலை ரூ.14,999. இந்த விலைகளில் அறிமுகச் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த டேப்லெட் 6nm MediaTek Helio G100 Processor-ல் இயக்கப்படுகிறது. இது அன்றாடப் பயன்பாடுகள் மற்றும் சாதாரண கேமிங்கிற்கு போதுமான செயல்திறனை வழங்குகிறது. OnePlus Pad Lite OxygenOS 15.0.1 இல் இயங்குகிறது, இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்டது. OnePlus Pad Lite 9,340 mAh பேட்டரியுடன் வருகிறது. இது ஒரே சார்ஜில் 11 மணிநேரம் வரை வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் திறனை வழங்குகிறது. மேலும், இது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது டேப்லெட்டை விரைவாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

ஆடியோவைப் பொறுத்தவரை, OnePlus Pad Lite ஆனது Hi-Res ஆடியோ சான்றளிக்கப்பட்ட குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் Omnibearing Sound Field தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது ஸ்கிரீன் ஓரியண்டேஷனுக்கு ஏற்ப தானாகவே ஆடியோவை சரிசெய்கிறது. கேமராவைப் பொறுத்தவரை, இதில் 5MP முன் கேமரா (வீடியோ அழைப்புகளுக்கு) மற்றும் 5MP பின் கேமரா ஆகியவை உள்ளன.

Advertisment
Advertisements

வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு மூலம் வாங்கும்போது ரூ.2,000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குவோர் 6 மாதங்கள் வரை வட்டி இல்லா EMI வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை OnePlus.in, Amazon, Flipkart, OnePlus Store App போன்ற ஆன்லைன் தளங்களிலும், OnePlus Experience Stores, Croma, Reliance Digital, Vijay Sales, Bajaj Electronics மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலும் வாங்கலாம்.

கனெக்டிவிட்டி விருப்பங்களில் Wi-Fi மற்றும் 4G LTE (சில மாடல்களில்), Bluetooth 5.4, மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். OnePlus Pad Lite ஆனது Quick Share மற்றும் O+ Connect போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. Clipboard Sharing மற்றும் Shared Gallery போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. குழந்தைகளுக்காக, Kids Mode மற்றும் Google Kids Space ஆகியவை இதில் முன்கூட்டியே install செய்யப்பட்டுள்ளன. OnePlus Pad Lite மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டை தேடும் பயனர்களுக்கு விருப்பமாக இருக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: