Advertisment

அசத்தல்! குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு டேப் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

OnePlus Tablet: ஒன்பிளஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
05 Sep 2023 புதுப்பிக்கப்பட்டது Sep 07, 2023 11:21 IST
OnePlus

OnePlus reportedly working on affordable Android tablet

ஒன்பிளஸ் நிறுவனம் குறைந்த விலையில் தனது பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

ஒன்பிளஸ் நிறுவனம் 'OnePlus Pad Go' என்ற பெயரில் ஆண்ட்ராய்டில் இயங்கும் டேப்லெட் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், லேப் பற்றிய குறிப்புகள் ஒன்பிளஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது.

AndroidAuthority இன் சமீபத்திய அறிக்கையின்படி, '@1NormalUsername' என்ற டிப்ஸ்டர் கூறுகையில், புதிய டேப்லெட் 'OPD2304' மாடலை கொண்டிருக்கும் என்றார். பி.ஐ.எஸ் இணையதளத்திலும் இது குறித்து பார்த்ததாக அவர் கூறினார்.

புதிய ஒன்பிளஸ் பேட் கே இரண்டு வெரியன்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்லுலார் மாடல் மற்றும் வைஃபை மாடலைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

முந்தைய ஒன்பிளஸ் டேப்லெட் பதிப்பான OnePlus Pad-ஐ விட இந்த புதிய டேப்லெட் குறைந்த விலையில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. எனினும் நாம் காத்திருக்க வேண்டும். டேப்லெட் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment