/tamil-ie/media/media_files/uploads/2018/09/DmT7zq0U4AAqMvg.jpg)
ஒன்ப்ளஸ் 6T
ஒன்ப்ளஸ் 6T (OnePlus 6T) : இந்தியாவில் ஆப்பிளுக்கு அதிக அளவு போட்டி தரும் ஒரு ப்ரீமியம் போன் என்றால் அது ஒன்ப்ளஸ் தான். தற்போது தன்னுடைய புதிய போனின் சிறப்பம்சங்களை ஒன்றொன்றாக வெளியிட்டு வருகிறது ஒன்ப்ளஸ்.
OnePlus 6T பற்றி புதிய அறிவிப்பு:
தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் OnePlus 6T ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி தற்போது வெளிவர இருக்கும் இந்த போனின் ஃபிங்கர் லாக்கானது திரைக்கு பின்னால் இருப்பது போல் ஒரு வீடியோவினை வெளியிட்டிருக்கிறது.
Incoming: Top Secret Message... pic.twitter.com/84d9ymNBQW
— OnePlus (@oneplus) 10 September 2018
வாட்டர்ட்ராப் ஸ்டைல் டிஸ்ப்ளே வெளிவருவதாகவும் வதந்திகள் வந்துள்ளன. அதே போல் மூன்று பின்பக்க கேமராக்களுடன் இந்த ஃபோன் வெளிவருவதாகவும் தெரிய வந்துள்ளது.
To read this article in English
இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் ஓப்போ R17 Pro போனின் சிறப்பம்சங்களை ஒத்திருப்பதாக கேட்ஜட் பிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஒன்ப்ளஸ் 6T வெளியிடப்படும் போதே புதிய புல்லட்ஸ் வையர்லெஸ் ஹெட்போன்கள் வெளியிடப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.