நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

நில அளவீட்டிற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ் நில வலைதளத்தில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
tamilnadu

இணைய வழியில் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் வசதி

நில அளவீடு செய்ய மக்கள் இதுவரை நேரில் சென்று அதிகாரிகளைப் பார்த்து விண்ணபிக்க வேண்டியிருந்தது. அதற்காக கடந்த ஆண்டே ஆன்லைன் முறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததிருந்தது. நிலம் அளவீடு செய்ய மக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் அவர்களின் நிலம் அளக்க வரும் தேதி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரரின் செல்போனுக்கு அனுப்பப்படும்.  

Advertisment

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பித்து வந்த நிலையில் வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2023 ஆம் ஆண்டே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை இ-சேவை மையங்கள் மூலம் பெற முடியும். நில உரிமையாளர்கள் இ-சேவை மையங்களை அணுகி தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், அட்டவணைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு தேதி விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

கணக்கெடுப்பு முடிந்ததும், நில உரிமையாளர் மற்றும் சர்வேயரின் கையொப்பத்துடன் அளவிடப்பட்ட நிலத்தின் வரைபடம் போர்ட்டலில் பதிவேற்றப்படும், பின்னர் விண்ணப்பதாரர் https://eservices.tn.gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Tamilnadu Government survey

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: