System Safety: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்திட ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறீர்களா? முதலில் உங்கள் கணிணியை வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
வீரியம் மிகுந்த தொற்று நோயான கொரோனா வைரஸ் COVID-19 பரவலைக் கட்டுபடுத்திட முடிந்த அளவுக்கு அதிகம் கூட்டம் கூடும் பகுதிகளுக்கு செல்லமல் இருப்பதை தவிர்திட வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்த்திட வீட்டில் இருந்து வேலை செய்வது, அதிகம் கூட்டம் கூடும் சந்தை பகுதிகளுக்கு செல்லாமல் இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலம் பொருட்களை வாங்குவது போன்றவை வலியுறுத்தப்படுகிறது. ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திட வீட்டில் இருந்து இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது மோசடி செய்பவர்களிடம் ஏமாறாமல் பண பரிவர்த்தனைகளை கவனமாக செய்ய வேண்டும்.
இந்திய ரிசர்வு வங்கியின் அறிக்கையின் படி இந்திய வங்கி அமைப்பு 2018-19 ஆம் நிதி ஆண்டில் மட்டும் ரூபாய் 71,500/- கோடி மதிப்பிலான பண மோசடிகளை கண்டுபிடித்துள்ளது. இணையதள பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்த பிறகு அதிலும் குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இணையதள மோசடிகளின் எண்ணிக்கை பயமுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இணையதளம் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்ய தள்ளப்பட்ட பிறகு இணையதள மோசடிகாரர்களும் வேட்டையில் முனைப்புடன் இறங்கிவிட்டனர்.
எனவே நீங்கள் பல்வேறு வகையான இணையதள மோசடிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். மேலும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில வகையான இணையதள் பண பரிவர்த்தனை மோசடிகள் குறித்து பார்ப்போம்.
Identity Theft: மோசடிகாரர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பெற்று அவற்றை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தும் போது இது நிகழ்கிறது.
Phishing or Tele Calling Scams: வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாக தொலைபேசியில் மோசடிகாரர்கள் தங்களை பொய்யாக அறிமுகம் செய்து, நம்பும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்கள் தனிப்பட்ட தகவல்களை பெற்று அவர்களை ஏமாற்றுவது.
Fake Payment Links and QR Codes: மோசடிகாரர்கள் ‘pay request’ இணைப்பு அல்லது போலியான QR code ஆகியவற்றை அனுப்பி சந்தேகம் இல்லாத நபர்களிடம் Paytm, PhonePe போன்ற e-wallets மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தேர்வுகளன UPI and Google Pay போன்றவைகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய சொல்லி ஏமாற்றுவது.
KYC Fraud: வங்கி அல்லது நிதி நிறுவனங்களிலிருந்து பேசுவதாக கூறி வாடிக்கையாளர்களை பற்றிய விவரங்களை வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்துக் கொள்ள கேட்பதாக மோசடிகாரர்கள் கேட்பார்கள். அதை நம்பி நீங்கள் உங்கள் தகவல்களை கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
விழிப்புடன் இருப்பது தவிர பொது WiFi அல்லது open network களை பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது, கணிப்பொறியில் anti-virus மற்றுன் anti-spyware மென்பொருளை நிறுவி அவ்வப்போது அதை update செய்வதும், இது போன்ற மோசடிகாரர்களிடம் ஏமாறாமல் பண பரிவர்த்தனை செய்ய உதவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"