/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-26T131619.333.jpg)
online games tamil news
Online games tamil news, PUBG Mobile free download: கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தேவையின்றி பொதுஇடங்களில் கூடுவதற்கு தடைவிதித்துள்ளது. வீட்டுக்குள் இருக்கும்போதும், தேவையான மற்றும் தகுந்த முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்த ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் அதிக போர் அடிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், நண்பர்கள், குடும்ப உறவுகளுடன் விளையாடி மகிழ ஆன்லைன் கேம்ஸ்கள் சிலவற்றை உங்களுக்கு இங்கு வழங்கியுள்ளோம்.
PUBG Mobile
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விளையாடி மகிழ PUBG Mobile உதவுகிறது. நாம் நமது படையினருடன் சேர்ந்து, எதிரி அணியை வீழ்த்தி, வெற்றிக்களிப்பில் சிக்கன் டின்னர் உண்பதே இதில் வெற்றியாகும். நாம் விளையாடிக்கொண்டிருக்கும்போதே, கேம் வாய்ஸ் சாட்டிங் வசதியில் பேசி மகிழலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.
Call of Duty: Mobile
இதுவும் PUBG Mobile போன்றதொரு விளையாட்டு தான். இதில் அதிகளவு கிராபிக்ஸ்கள் உள்ளன. டீம் டெத் மேட்ச் உள்ளிட்ட பார்மேட்கள் இதன் சிறப்பம்சம் ஆகும்.
Ludo Talent
PUBG Mobile மற்றும் Call of Duty விளையாட்டு பிடிக்காதவர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது Ludo Talent. மதிநுட்பமாக செயல்பட்டு இந்த போட்டியில் நாம் வெற்றி பெறலாம். இந்த விளையாட்டிலும், மற்றவர்களுடன் பேச வாய்ஸ் சாட் வசதி உள்ளது.
Uno Friends
Ludo Talent விளையாட்டுக்கு மாற்றாக Uno Friends விளையாட்டு உள்ளது. இந்த விளையாட்டில் 4 பேர் பங்கேற்க முடியும். மிக விரைவாக விளையாடும் விளையாட்டு இது ஆகும்.
8 Ball Pool
உங்களுடன் விளையாட ஒருவர் தான் இருக்கிறார் என்றால், அப்போது உங்களுக்கு ஏத்த விளையாட்டு 8 Ball Pool இதுதான். இது உண்மையான பில்லியர்ஸ் போர்டில் விளையாடிய அனுபவத்தை தரும். நண்பர்களை வீழ்த்தி விளையாடுவதற்கேற்ற விளையாட்டு இது ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.