Advertisment

இணைய சேவையில் பின்தங்கிய இந்தியா... ஒரே வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட தென் கொரியா

அலைபேசிகளுக்கான இணைய சேவை வேகத்தில் ஆசியா முதலிடத்திலும், வட அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ookla Speedtest Global Index 2019 Indian internet speed

Ookla Speedtest Global Index 2019 Indian internet speed

Ookla Speedtest Global Index 2019 Indian internet speed : ஊக்லா (Ookla) என்ற நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன்களுக்கான இணைய சேவையின் வேகம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் எந்தெந்த உலக நாடுகளில் இணையத்தின் வேகம் அதிகமாக உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. 2017 முதல் 19 வரையிலான காலகட்டத்தில் உலக அளவில் இணையத்தின் வேகம் அதிகரித்துள்ளது.

Advertisment

உலக அளவில் மொபைல் இணையத்தின் வேகம் 21.4% அதிகரித்துள்ளது. 22.82 Mbps என்று இருந்த  இணைய வேகம் 27.69 Mbps வரை அதிகரித்துள்ளது. அதேபோன்று பிராட்பேண்ட் சேவையின் இணைய வேகமும் 37.4% அதிகரித்துள்ளது. 46.8 Mbps என்று இருந்த ப்ராட்பேண்ட் சேவையின்  வேகம்  63.85 Mbps என்று அதிகரித்துள்ளது.

இணைய சேவையில் பின் தங்கியிருக்கும் இந்தியா

அந்த அறிவிப்புல் இந்தியாவில் 16.3 சதவீதம் மொபைலுக்கான இன்டர்நெட் சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையின் வேகம் 28.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இருப்பினும் உலக அளவில் சராசரியான இணைய வேகத்திற்கு கீழேதான் இருக்கிறது இந்தியா.  ரஷ்யாவும் இதேபோன்ற ஒரு நிலையில் தான் உள்ளது. மொபைல் கால் இன்டர்நெட் சேவை 15.7 மற்றும் பிராட்பேண்ட்க்கான சேவை 40.9% என்ற அளவில் ரஷ்யாவில் இணைய வேகம் செயல்பட்டு வருகிறது.

டாப் 10 இடங்களை பெற்ற நாடுகள்

கடந்த ஒரு வருடத்தில் உலக அளவில் இணைய சேவை பயன்பாடு மற்றும் வேகம் முற்றிலுமாக மாறி உள்ளது.  கடந்த முறை வெளியிட்ட பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட வராத தென்கொரிய நாடு இம்முறை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய பின்பு இந்த நாட்டில் இணைய சேவையின் வேகம் 165.9 சதவீதம் என்ற மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா 21.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து (டவுன்லோட் வேகத்தை அடிப்படையாக கொண்டு ) பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இடத்தைப் பிடித்த கத்தார் 1.4 சதவீதம் வேகத்தில் குறைபாடு ஏற்பட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 5ஜி அறிமுகமான பின்பு அந்நாடும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளாது. கனடா(+22.2 %), நெதர்லாந்து (+17.3%), மால்ட்டா(+10.3%),சிங்கப்பூர், மற்றும் நார்வே(+5.8%) ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்

தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தான் 5ஜி சேவையை அவர்களின் நாடுகளில் அறிமுகம் செய்தனர். அதனால் அந்த நாடுகள் தற்போது இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் சுவிட்சர்லாந்து இணைய சேவையின் வேகம் 2.8% தான் வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவிலும் 5ஜி இணைய சேவை அறிமுகமானது. ஆனாலும் அதற்கான மார்கெட் அங்கு குறைவான அளவில் தான் உள்ளது.

கண்டங்கள் என்று பார்த்துக் கொண்டால், அலைபேசிகளுக்கான இணைய சேவை வேகத்தில் ஆசியா முதலிடத்திலும், வட அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ப்ராட்பேண்ட் கனெக்சன் என்றால் தென் அமெரிக்கா முதலிடத்திலும், ஆசியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

மேலும் படிக்க : ஏர்டெலின் முத்தான மூன்று ஆஃபர்கள் 

South Korea
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment