சாட் ஜி.பி.டி சர்ச், கூகுள் ஆண்ட்ராய்டு 16 அறிமுகம் என இந்த வாரம் பல சுவராஸ்ய டெக் தகவல்கள் உள்ளன.
ஓபன் ஏ.ஐ நிறுவனம் கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக சாட் ஜி.பி.டி சர்ச் என்ற பெயரில் தேடல் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஜெனரேட்டிவ் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மற்றொரு பரிமாணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள்னின் சோர்ஸ்களுக்கான லிங்க்குகள் மற்றும் செய்தி இணைப்புகள் இதில் இருக்கும். தற்போது இதனை சந்தா கட்டணம் செலுத்தியே பயன்படுத்த முடியும் விரைவில் இலவச பயன்பாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் ஆப்பிள் நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட எம்.4 சிப்ஸ் உடன் கூடிய புதிய மேக் புக் ப்ரோ மாடல் லேப்டாப்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேக் புக் மினி, ஐமேக் போன்றவற்றையும் அறிமுகம் செய்கிறது.
ஆண்ட்ராய்டு 16 வெளியீடு
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூகுள் வழக்கமாக தனது புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் புதுப்பிப்புகளை ஒவ்வொரு வருடமும் இறுதியில் வெளியிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“