Oppo a53 அறிமுகம்: பட்ஜெட் விலை... 3 வண்ணங்கள்... புது டெக்னாலஜி
Oppo a53 specifications : ஓப்போ ஏ53 போனில், ஆண்ட்ராய்ட் 10 ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. டுயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் டிஜிட்டல் சவுண்ட் கரெக்சன் டெக்னாலஜி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Oppo a53 tamil news, Oppo a53 price: புதிய நவநாகரீக ஸ்மார்ட்போன்கள் அறிமுக பந்தயத்தில் ஓப்போ நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. அந்த வகையில், ஓப்போ நிறுவனம், ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான மதிப்பில் ஓப்போ ஏ53 ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. பேசிக் வகை ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன், ரூ. 12,990 ஆகவும், டாப் எண்ட் போன் ரூ.15,490 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் பிளாக்ல பேரி ஒயிட், பேன்சி புளு என 3 வர்ணங்களில் இந்த போன்கள் அறிமுகமாக உள்ளன.
Advertisment
ஓப்போ ஏ53 போன், 6.5 இஞ்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 1600 x 720 பிக்சல் ரெசலுசன், 90 ஹெர்ட்ஸ் ரெபிரெஷ் ரேட் உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிரான் ஆக்டா கோர் 460 புராசசர், கேம்ஸ்கள் விளையாட உறுதுணை புரிகிறது. 4 ஜிபி, 64 ஜிபி மற்றும் 6 ஜிபி, 128 ஜிபி என 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது. 5 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ். 186 கிராம் எடை கொண்ட இந்த போன், 8.44 மிமீ ஸ்லிம் கொண்டது.
ஓப்போ ஏ53 போனில், ஆண்ட்ராய்ட் 10 ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. டுயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் டிஜிட்டல் சவுண்ட் கரெக்சன் டெக்னாலஜி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ள நாளிலேயே ஓப்போ ஏ53 போனும் அறிமுகமாக உள்ளது. நோக்கியோ 5.3 பேஸ் வேரியண்ட் போனின் விலை ரூ.13,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ டெபிட் கார்டு கிரெடிட் கார்டு, பெடரல் பேங்க் கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகளை கொண்டு பிளிப்கார்ட்டில் வாங்கினால் 5 சதவீத கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil