ஓப்போவின் அசத்தலான ஏ71 எஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தின் அசத்தலான மாடலான ஏ71எஸ் ஸ்மாடர்ஃபோன் 13 எம்பி ரியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

ஓப்போ நிறுவனத்தின் அசத்தலான மாடலான ஏ71எஸ் ஸ்மாடர்ஃபோன் 13 எம்பி ரியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

நாளுக்கு நாள் ஸ்மார்ட்ஃபோன்களின் வரவு அதிகரித்து வரும் இன்றைய தொழில் நுட்ப உலகில், களத்தில் இருக்கும் மொபைல் நிறுவனங்கள் ஒவ்வொரு ஸ்மார்ஃபோன்களிலும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி சந்தையில் வெளியிடுகின்றன. அந்த வகையில், ஓப்போ நிறுவனத்தில் ஏ71 எஸ் மாடல், ஃபோன் பிரியர்களிடம் புதிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக வெளிவரும் இந்த மாடல் குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளனர். சமீபத்தில் வெளியான ஓப்போ ஏ71 எஸ் ஸ்மார்ஃபோன் ஃபோன் பிரியர்களை பெரிதளவில் கவர்ந்திருந்தது. அதே போல், அடுத்ததாக வெளியாக உள்ள ஏ71 எஸ் மாடலும், ஸ்மார்ட்ஃபோன் யூசர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்ட இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ. 9,990 இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ஃபோனின் தொடுதிரையில் இது வரை வெளிவந்த எந்த மொபைல் ஃபோனிலும் இடம்பெறாத வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் இணைப்புகளாக *வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ஃபோன் அறிமுகமாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ஏ71 எஸ் மாடலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

*.2-இன்ச் டிஎப்டி எச்டி டிஸ்ப்ளே

*1920×720 பிக்சல்

*18:9 ரேஷியோ டிஸ்ப்ளே

*ஆக்டோ-கோர் மீடியாடெக்

* 13எம்பி ரியர் கேமரா

*முன்பக்க செல்ஃபி கேமரா 5 மெகாபிக்சல்

*எல்இடி ஃபிளாஷ் சப்போர்ட்

*3000எம்ஏஎச் பேட்டரி

×Close
×Close