Oppo debuts 5G smartphone : பார்சிலோனாவில் நடைபெற்று வருகிறது புகழ்பெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ். இதில் உலகின் தலை சிறந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப் நிறுவனங்கள் தங்களின் புதிய ப்ரோடக்ட்டுகளை அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று நோக்கியா, ஓப்போ, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களின் போன்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளனர். ஓப்போ தன்னுடைய முதல் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்ய உள்ளது.
Oppo debuts 5G smartphone - சிறப்பம்சங்கள்
இந்த போன் குவால்கோம் 855 ப்ரோசசர் மற்றும் X50 மோடம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனிற்கான பெயர் எதுவும் நமக்குத் தெரியாத நிலையில், ஐரோப்பிய சந்தைகளில் இந்த போன் களம் இறக்கப்படுவதாக தகவல்கள் வேளியாகியுள்ளன.
இந்த போன் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களான ஸ்விஸ்காம், டெல்ஸ்ட்ரா, ஓப்டஸ் மற்றும் சிங்டெல் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 மடங்கு ஸூம் செய்து ஒரு புகைப்படத்தை எடுத்தாலும், அதன் மூலம் புகைப்படத்தின் எந்த ஒரு அஸ்பெக்டும் குறையாமல் இருக்கும் என்பது இந்த போனின் முக்கியமான சிறப்பம்சம்சமாகும்.
48எம்.பி. பிரைமரி கேமரா, 120 டிகிரி அல்ட்ரா வைட் கேமரா லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் என்ற காம்பினேஷனில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.
16 எம்.எம்.-இருந்து 160 எம்.எம் வரையில் நீங்கள் ஒரு புகைப்படத்தை எடுக்க இயலும்.
2017ல் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் 5X ஹைப்ரிட் ஸூம் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் இன்று அறிமுகம்