எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்… ஓப்போவின் போன்கள் அறிமுகமா?

10x hybrid optical zoom தொழில்நுட்பத்துடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

By: Updated: December 28, 2018, 05:52:44 PM

Oppo F19, F19 Pro Smartphones : ஓப்போ போன்களின் புதுவரவாக ஓப்போ எஃப் 19, ஓப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், அடுத்த வருடம், பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் வெளியாக உள்ளது.

10 மடங்கு லாஸ்லெஸ் ஜூம் (10x hybrid optical zoom technology) தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளது இந்த போன். அதே நேரத்தில் ஓப்போவின் புதிய கேமரா தொழில் நுட்பத்தினை லாஸ் வேகஸ்ஸில் நடைபெற இருக்கும் CES 2019 நிகழ்வு அல்லது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் இந்த போன்கள் வெளியாகலாம் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Oppo F19, F19 Pro Smartphones ஜூம் சிறப்பம்சங்கள்

ஏற்கனவே வூக் சார்ஜிங் மற்றும் 5 மடங்கு லாஸ்லெஸ் ஜூம் ( 5X lossless zoom) தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவிப்பினை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளங்களில் வெளியிட்ட பின்பு, பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததைப் போல் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ போனைப் போல் மூன்று பின்பக்க கேமராக்களுடன் இந்த இரண்டு போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டுமே இது நாள் வரையில் 2X optical zoom lensகளை டெலிபோட்டோ கேமராவில் பயன்படுத்தி வருகிறது. ஆனால் ஓப்போவின் 5X dual camera zoom வைட் ஆங்கிள் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ்களில் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : போக்கோ எஃப்1 ஆர்மர்ட் போன்களின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Oppo f19 f19 pro smartphones could sport 10x lossless zoom tech to be shown at mwc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X