/tamil-ie/media/media_files/uploads/2017/11/oppo-f5-main1.jpg)
பல முன்னணி பிராண்டுகளை தவிர்த்து தற்பொழுது புதிய வரவில் ஆதிக்கம் செலுத்தும் ஒப்போ ஸ்மார்ட்போன் 6ஜிபி RAM உடன் F5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைபேசி ரூ 24,990க்கு கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் ஒப்போ F5 4ஜிபி RAM மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவந்தது. தற்பொழுது அதே குறிப்புகளை கொண்ட போன் 6ஜிபி RAM மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது. F5 4ஜிபி RAM கைபேசி ரூ.19,990 மட்டுமே.
இந்த கைபேசி F5 யின் எல்லா குறிப்புகளுடன் இந்த இரு மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளது. வெளியிட்டு விழாவின் போதே இதை அறிமுகம் படுத்தியது ஒப்போ, ஆனால் சந்தைக்கு வரவில்லை. தற்பொழுது Flipkartல் விற்பனை தொடங்கியுள்ளது.
ஒப்போ F5 குறிப்புகள்
ஒப்போ F5, 6 அங்குல டிஸ்ப்ளே திரையை கொண்டுள்ளது. 2.5GHz MT6763T அக்ட்டா கோர் செயலி, 6ஜிபி RAM மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி மூலம் 128ஜிபி ஸ்டோரேஜெய் பயன்படுத்தலாம். ஆண்டிராய்ட் 7.1 நௌகட்டில் இது இயங்குகிறது.
16 மெகா பிசேல் முன் கேமிரா மற்றும் 20 பின்பக்க கேமிரா இதில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி 200 க்கும் மேற்பட்ட முகப்புள்ளி புள்ளிகளை ஸ்கேன் செய்து சிறந்த செல்பிகளை எடுக்கும். இதில் போட்டிரேய்ட் மோட் உள்ளது அதனால் துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.