Advertisment

பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் வெளியாகும் ஓப்போ கே3 ஸ்மார்ட்போன்!

Oppo K3 Smartphone Price :  பர்ப்பிள், கறுப்பு நிற வேரியண்ட்டுகளில் வெளியாகும் இந்த போனுக்கு பல்வேறு அறிமுக சலுகையை வழங்கியுள்ளது அமேசான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oppo K3 Smartphone launch, specifications, price

Oppo K3 Smartphone launch, specifications, price

Oppo K3 Smartphone launch, specifications, price : ஜூலை 19ம் தேதி வெளியாகிறது ஓப்போ நிறுவனத்தின் கே3 ஸ்மார்ட்போன். அமேசான் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைக்கின்றது, மேலும் முன்பதிவிற்காக நோட்டிஃபை மீ பக்கத்தினை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .

Advertisment

மேலும் படிக்க : 15 மற்றும் 16 தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல்... மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம் வருத்தப்படுவீங்க!

Oppo K3 Smartphone launch, specifications, price

6.5 இன்ச் எச்.டி. + ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது

இதன் ரெசலியூசன் 2340 X 1080 பிக்சல்களாகும்

இன் - டிஸ்பிளே ஃபிங்கர் ப்ரிண்ட் டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

ப்ரோசசர் - குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710

ஜி.பி.யூ - ஆட்ரெனோ 616

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட கலர் ஓ.எஸ். 6.0 ஸ்கின்னில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

பேட்டரி 3,765mAh சேமிப்புத்திறனை கொண்டுள்ளது.

Oppo K3 Smartphone கேமரா

இரட்டை பின்பக்க கேமராவை கொண்டுள்ளது. 16 எம்.பி. ப்ரைமரி சென்சாரையும், 2 எம்.பி. செகண்டரி சென்சாரையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா பாப்-அப் கேமராவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் 16 எம்.பி. ஆகும்

Oppo K3 Smartphone Price

ஓப்போ நிறுவனத்தின் இந்த கே3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் வெளியாகிவிட்டது.

6GB RAM/64GB வேரியண்ட் ஸ்மார்ட்போனின் விலை யுவான் 1,599 ஆகும். இந்திய மதிப்பின் படி ரூ. 16,000

6GB RAM/128GB வேரியண்ட் ஸ்மார்ட்போனின் விலை யுவான் 1,899. இந்திய மதிப்பின் படி ரூ. 19,000 ஆகும்.

8GB RAM/256GB வேரியண்ட் ஸ்மார்ட்போனின் விலை யுவான் 2,299 ஆகும். இந்திய மதிப்பின் படி ரூ. 23,000 ஆகும்.

மேலும் படிக்க : ட்விட்டரில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்!

Oppo K3 Smartphone color varient

பர்ப்பிள் மற்றும் கறுப்பு நிற வேரியண்ட்டுகளில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிறைய அறிமுக சலுகையை வழங்கியுள்ளது அமேசான்

Oppo India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment