Advertisment

64 எம்.பி. கேமராவுடன் ஓப்போ ஸ்மார்ட்போன்! இந்தியாவில் விற்பனை எப்போது?

30 வாட்ஸ் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலமாக ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oppo k5 smartphone specifications

Oppo k5 smartphone specifications

oppo k5 smartphone specifications : ஓப்போ கே சீரியஸின் புதிய ஸ்மார்ட்போனான ஓப்போ கே5 சீனாவில் வெளியாகியுள்ளது. மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனான இந்த ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ளது.

Advertisment

oppo k5 smartphone specifications (வேரியன்ட் மற்றும் விலை)

6ஜிபி/128 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை 1,899 யுவான் (ரூ. 18,900) ஆகும்

8ஜிபி /128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கே5 விலை 2099 யுவான் (ரூ. 20,900) ஆகும்

8ஜிபி/256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 2499 யுவான் (ரூ. 24,900) ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ஓப்போ இணையம் மற்றும் Suning.com, JD.com and Tmall ஆகிய தளங்களை ப்ரீ-புக்கிங் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அக்டோபர் 17ம் தேதி முதல் மக்களின் கைகளுக்கு வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

சிறப்பம்சங்கள்

2340×1080 பிக்சல்களுடன் கூடிய 6.4 இன்ச் ஃபுல் டிஸ்பிளே + ஏ.எம்.ஓ.எல்.இ.டி திரையை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஜி.பி.யூ-ஆக அட்ரெனோ 618 கிராஃபிக்ஸ் கார்ட் பொருத்தப்பட்டுள்ளது.

நீலம், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது

இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 730ஜி, 64எம்.பி குவாட் கேமரா செட்-அப் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் சிறப்புகளை வழங்குகிறது.

30 வாட்ஸ் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலமாக ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இயலும்.

ஆண்ராய்ட் 9 பை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அந்நிறுவனத்தின் இயங்குதளமான கலர். ஒ.எஸ். 6 ஸ்கினில் இயங்குகிறது.

பேட்டரி சேமிப்புத்திறன் 3,920mAh ஆகும். உலக அளவில் அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கும் இந்த ஸ்மார்ட்போன் விலைக்கு வருமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க : கோபமடைந்த வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்கள் ஃப்ரீ டாக்-டைம் – ஜியோ புது முயற்சி

Oppo India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment