Oppo reno 2 smartphone announcement : ஓப்போவின் ரெனோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்களும் 20 மடங்கு அதிகப்படியான ஸூம் கெப்பாசிட்டியுடன் வெளியாக உள்ளது. ஓப்போ ரெனோ சீரியஸின் சிக்னேச்சர் ஷார்க்ஃபின் வடிவில் பாப் அப் செல்ஃபி கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
ஓப்போவின் ஆர் சீரியஸிற்கு மாற்றாக ரெனோ சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் மீது அதிக கவனப்பை செலுத்தி வந்தது ஓப்போ நிறுவனம். இது வரையில் இந்த சீரியஸில் Reno 10x zoom edition and Reno standard edition என இரண்டு போன்கள் வெளியாகியுள்ளன. இதில் 10x ஸூம் எடிசனில் மூன்று கேமராக்களும், ஸ்டான்டர்ட் எடிசனில் 2 கேமராக்களுக்கும் பொருத்தப்பட்டிருந்தது.
Oppo reno 2 smartphone announcement
ஓப்போவின் ரெனோ 2விலும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஓப்போ நிறுவனம். அதில் நான்கு கேமராக்கள், ஸூம் கெப்பாசிட்டி, அறிமுக தேதி ஆகியவை தவிர வேறொன்றைக் குறித்தும் அறிக்கவில்லை. ப்ரோசசர் முதற்கொண்டு அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இருக்கும் அப்டேட்டில் எங்களை தொடருங்கள் : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டெக்னாலஜி செய்திகள்
இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 20, ரியல்மீ5 போன்ற போன்களோடு நேரடியாக களத்தில் போட்டியிட உள்ளது. இந்த இரண்டு போன்களும் நான்கு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களிலும் இனி வாட்ஸ்ஆப் ஃபிங்கர் பிரிண்ட் ஆதெண்டிகேசன்