ஒப்போ ரினோ 5 ப்ரோ+ 5 ஜி அறிமுகம்: புதிய வசதிகள், விலை விவரம்

Oppo Reno 5 pro 5g Price, Specification செவ்வக கேமரா தொகுதியுடன் பின்புற பேனலில் பஞ்ச்-ஹோல் ஸ்க்ரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Oppo Reno 5 pro 5g launched in China price specifications Tamil News
Oppo Reno 5 pro 5g launched in China price specifications

Oppo Reno 5 pro 5g price specifications Tamil News : ஒப்போ தனது ரினோ 5 ப்ரோ + 5 ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒப்போ ரினோ 5 ப்ரோவில் பயன்படுத்தப்படும் மீடியா டெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட்டுக்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசசர் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. இந்த தொலைபேசியின் சிறப்பம்சம் சோனியின் புதிய 50MP IMX766 சென்சார்தான். மேலும், செவ்வக கேமரா தொகுதியுடன் பின்புற பேனலில் பஞ்ச்-ஹோல் ஸ்க்ரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஒப்போ ரினோ 5 ப்ரோ + 5 ஜி: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

ஒப்போ ரினோ 5 ப்ரோ+, 6.55 இன்ச் முழு HD + (1,080 × 2,400 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே 20: 9 விகிதத்துடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் வருகிறது. தொலைபேசியின் பரிமாணங்கள் – 159.9 × 72.5 × 7.99 மிமீ. ஸ்க்ரீனில் 402ppi பிக்சல் அடர்த்தி உள்ளது மற்றும் 180Hz-ன் டச் சாம்ப்ளிங் அடங்கும்.

ஒப்போ ரினோ 5 ப்ரோ +, குவாட்-கேமரா அமைப்பை 50MP Sony IMX766 முதன்மை சென்சார் f/1.8 லென்ஸுடன், 16 எம்.பி அல்ட்ரா-வைட் சென்சார் f/2.2 லென்ஸுடன், 13 எம்பி டெலிஃபோட்டோ கேமரா f/2.4 லென்ஸுடன், 2MP மேக்ரோ சென்சார் f/2.4 லென்ஸுடனும் வருகிறது. மேலும் இது 32MP செல்ஃபி ஷூட்டரையும் கொண்டுள்ளது.

ரினோ 5 ப்ரோ +, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-ஆல் இயக்கப்படுகிறது மற்றும் அதிகபட்சமாக 12 ஜிபி RAM வரை வருகிறது. சேமிப்பு பொறுத்தவரை 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பங்கள் உள்ளது. இந்த தொலைபேசியில் மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் இல்லை.

தொலைபேசியில் 4,500 mAh பேட்டரி உள்ளது. இது 65W SuperVOOC 2.0 வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் பாதுகாப்புக்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஒப்போ ரினோ 5 ப்ரோ+, இரட்டை சிம் ஆதரிக்கிறது மற்றும் அண்ட்ராய்டு 11-இல் ColorOS 11.1 உடன் இயங்குகிறது.

ஒப்போ ரினோ 5 ப்ரோ + 5 ஜி: விலை

ஒப்போ ரினோ 5 ப்ரோ+, சீனாவில் யுவான் 3,999-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு சுமார் ரூ.45,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 ஜிபி RAM + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை யுவான் 4,499 அதாவது கிட்டத்தட்ட ரூ.50,600 ஆகும். வழக்கமான ஒப்போ ரினோ 5 ப்ரோ + மாடல்கள் டிசம்பர் 29-ம் தேதி சீனாவில் ப்ளூ மற்றும் கருப்பு நிற விருப்பங்களில் விற்பனைக்கு வர உள்ளன. அதே நேரத்தில் சிறப்புப் பதிப்பு மாடல் ஜனவரி 18 முதல் முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி கிடைக்கும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் அறிமுகம் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Oppo reno 5 pro 5g launched in china price specifications tamil news

Next Story
கிறிஸ்துமஸ் கோலாகலம்; ஆன்லைனில் சாண்டா: கூகுளில் எப்படி பார்ப்பது?Christmas 2020 Santa Claus Tracker Norad Google Christmas Tracker Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com