இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓப்போவின் புதிய போன் விற்பனைக்கு வரலாம் என்று ஓப்போவின் துணை தலைவர் ப்ரையன் ஷேன் அறிவித்திருந்தார். தற்போது அந்த போன் பற்றிய தகவல்களுடன் கூடிய அறிவிப்பு பென்ச்மார்க் இணையமான அண்டுடுவில் வெளியாகியுள்ளது.
Oppo Smartphone with Snapdragon 855 சிறப்பம்சங்கள்
அதன் மாடல் எண் OP46C3.
அதன் ரெசலியூசன் 2340×1080 பிக்சல்களாக இருக்கலாம் என அண்டுடு அறிவித்துள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் கூடிய இந்த போன் 3,65,246 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கேமரா :
48 எம்.பி. பிரைமரி கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இந்த போனும் இடம் பிடிக்க உள்ளது. மேலும் 12 எம்.பி. பின்பக்க கேமராவும், 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் இந்த போனில் இணைக்கப்பட்டுள்ளது.
ஓப்போவின் 10 மடங்கு சேதாரமற்ற ஸூம் டெக்னாலஜியினை இந்த போனில் பயன்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று பின்பக்க கேமராக்களை இந்த போன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சாம்சங் கேலக்ஸி எஸ்10+ ஸ்மார்ட்போன் எப்படி ? - முதற்பார்வை