Advertisment

ஐ.பி69 ரேட்டிங்; இந்தியாவின் முதல் டேமேஜ் ப்ரூஃப் ஸ்மார்ட் போன்: ஓபோ F27 Pro+ 5ஜி அறிமுகம்

Oppo F27 Pro+ launched in India: ஓபோ F27 Pro+ 5ஜி என்ற அட்டகாசமான புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Oppo F27 Pro+.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஓபோ இந்தியாவின் முதல் ஐ.பி69 ரேட்டிங் ஸ்மார்ட் போன் இன்று வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது. F27 Pro+ 5ஜி போன் 360 டிகிரி ஆர்மோர் பாடியுடன் டேமேஜ் ப்ரூஃப்  வழங்குகிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கீழே விழுந்தாலும், scratches விழாமல் பாதுகாத்துக் கொள்ளும் என்று கூறுகிறது. 

Advertisment

ஸ்மார்ட் போன் 2 நிறங்களில் கிடைக்கிறது –– டஸ்க் பிங்க் மற்றும் மிட்நைட் நேவி ஆகிய நிறங்களில் வருகிறது. 128GB, 256GB சேமிப்பு உடன் 2 வெரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.27,999 ஆகும். 

Oppo F27 Pro+ ஜூன் 20 முதல் விற்பனைக்கு வரும் மற்றும் தற்போது ப்ரீ ஆர்டர் தொடங்கப்பட்டுள்ளது. Oppo F27 Pro+?ன் சிறப்பம்சம் அதன் IP69 ரேட்டிங் ஆகும். இது அதிக அழுத்தம் மற்றும் தீவிர வெப்பநிலையைத் தாங்கக்கூடிய வார்டர் ப்ரூஃப்  ஸ்மார்ட் போனாக அமைகிறது. 

சிறப்பம்சங்கள் 

6.7-இன்ச் 3D curved டிஸ்ப்ளே கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. இது MediaTek Dimensity 7050 SoC மூலம் 8 GB ரேம் மற்றும் 128GB, 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.

Oppo F27 Pro+ போன், 64 எம்.பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ColorOS 14 உடன் நான்கு வருட மென்பொருள் புதுப்பிப்புகளுடன் அனுப்பப்படுகிறது.  5,000 mAh பேட்டரி 67W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

oppo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment