Advertisment

உலகின் முதல் ரோலபிள் டிஸ்பிளே; Oppo அறிமுகம்: என்ன ஸ்பெஷல்? எப்போது கிடைக்கும்?

ஒப்போ X 2021, ரோலபுல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் முதல் 7.4 இன்ச் அகலம் வரை இருக்கும்.

author-image
WebDesk
New Update
Oppo X 2021 Rollable Display Mobile and Oppo Ar Glasses 2021 Tamil Tech News

Oppo X 2021 Rollable Display Mobile and Oppo Ar Glasses 2021

Oppo X 2021 Rollable Display Mobile and Oppo AR Glasses 2021 Tamil Tech News : ஒப்போ தனது INNO Day 2020-ன் ஒரு பகுதியாக இரண்டு புதிய ஹார்டுவேர் பொருள்களை சீனாவின் ஷென்சென் நகரில் நிகழ்ந்த விழா ஒன்றில் அறிவித்திருக்கிறது. அதில் புதிய ஒப்போ X 2021-ம் அடங்கும். ரோலபுல் டிஸ்பிளே மற்றும் புதிய ஒப்போ ஏஆர் (ஆக்மென்ட் ரியாலிட்டி) கண்ணாடிகள் 2021 ஜோடியையும் உள்ளடக்கியுள்ளது. 2021-ம் ஆண்டில் புதிய தயாரிப்புகள் கிடைக்கும் என ஒப்போ கூறுகிறது. ஆனால், சரியான காலவரிசையைத் தெரிவிக்கவில்லை.

Advertisment

ரோலபுல் டிஸ்பிளேயுடன் ஒப்போ X 2021

ஒப்போ X 2021, ரோலபுல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் முதல் 7.4 இன்ச் அகலம் வரை இருக்கும். பயனர்கள் மொபைலை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார்களோ அதைப்பொறுத்து அதன் அளவுகள் மாறுபடும். இந்தச் செயல்பாடு ஓர் சுருள் எவ்வாறு வெளிவருகிறதோ அதேபோன்று இருக்கும் என ஒப்போவின் துணைத் தலைவரும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான லெவின் லியு கூறுகிறார்.

சாம்சங் போன்ற நாம் பார்க்கப்பட்ட பிற மடிக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களைப் போல், திரையின் மடிந்த பகுதியை ரோல் செய்யும்போது எந்த மடிப்புகளும் இதில் தெரியவில்லை. இந்த தொலைபேசிக்காக 122 காப்புரிமைகள் பெறப்பெற்றுள்ளன. அதில் 12 காப்புரிமைகள் டிஸ்பிளேவுக்காக மட்டுமே என ஒப்போ கூறுகிறது.

Oppo X 2021 Rollable Display Mobile and Oppo Ar Glasses 2021 Tamil Tech News Oppo X 2021 Rollable Display Mobile

"தொடர்ச்சியாக மாறக்கூடிய OLED டிஸ்ப்ளே" என்று ஒப்போ X 2021 மொபைலை நிறுவனம் குறிப்பிடுகிறது. பயனர் அவர்களின் தேவையைப் பொறுத்து அகலத்தை அமைத்துக்கொள்ள முடியும். மேலும், திரை விரிவாக்கப்படும்போது, தடையற்ற விளைவை தொலைபேசி ஏற்படுத்துகிறது. திரையை முடிக்கும்போது இதில் எந்தவித வேறுபாடும் இருக்காது.

இந்த சிறப்பு டிஸ்பிளே, ரோல் மோட்டார் பவர்டிரெய்ன், 2-இன் -1 ப்ளேட் மற்றும் செல்ஃப் டெவலப்டு வார்ப் ட்ராக் உயர் திறன் கொண்ட ஸ்க்ரீன் லேமினேட் ஆகிய நிறுவனத்திலிருந்து மூன்று தனியுரிமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. திரையின் அடியில் உள்ள 2-இன் -1 தட்டு காட்சியை ரோல் செய்யும்போது முழுமையாக ஆதரிக்கிறது. திரைகளின் இடது மற்றும் வலது புறம் முழுமையாக விரிவடையும் போது அது முற்றிலும் தட்டையாக இருப்பதைத் தட்டு உறுதி செய்கிறது.

திரையை ரோல் செய்யும்போது ‘ரோல் மோட்டார் பவர் ட்ரெய்ன்’ ஸ்க்ரீனை இயக்குகிறது. சாதனம் திறனுடன் இருப்பதை உறுதிசெய்ய வார்ப் ட்ராக் உயர் திறன் ஸ்க்ரீன் லேமினேட் உள்ளது. இது ஒரு தனித்துவமான, கூடுதல் வலுவான எஃகு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த லேமினேட், 0.1 மில்லிமீட்டர் அடர்த்தி மட்டுமே இருப்பதாக ஒப்போ கூறுகிறது.

ஒப்போ அதன் விளக்கக்காட்சியின் போது காண்பித்தவற்றின் அடிப்படையில் ஒப்போ X 2021, 16: 9 அல்லது 4: 3 பார்க்கும் வடிவங்களை ஆதரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த தொலைபேசி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், ஒப்போ அந்த நேரத்தில் கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தும். நிகழ்வின் போது சாதனம் பற்றிய வேறு விவரக்குறிப்புகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை.

Oppo X 2021 Rollable Display Mobile and Oppo Ar Glasses 2021 Tamil Tech News Oppo Ar Glasses 2021

ஒப்போ ஏஆர் கண்ணாடிகள் 2021

ஒப்போ AR கண்ணாடிகள் 2021, கடந்த ஆண்டு ஒப்போ INNO தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2020 வேரியன்ட்டில் மேம்படுகிறது. 2021 கண்ணாடிகள் ஸ்ப்ளிட் வடிவமைப்பு காரணியைக் கொண்டுள்ளன மற்றும் முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது 75 சதவிகிதம் குறைவாக இருக்கும். ஒளி வடிவமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான மாற்றத்தை உறுதி செய்யும் என்று ஒப்போ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒப்போ ஏஆர் கண்ணாடி 2021, முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது மேம்பட்ட CPU மற்றும் GPU செயல்திறனுடன் வருகிறது. கண்ணாடிகளில் ஸ்டீரியோ ஃபிஷ் கேமரா (stereo fisheye camera), ஒரு டைம் ஆஃப் ஃப்ளைட் (ToF) சென்சார் மற்றும் ஒரு ஆர்ஜிபி கேமரா ஆகியவை உள்ளன. ஒப்போ காட்சிகள் 90 அங்குல டிவியுடன் ஒப்பிடப்பட்டது. சிறந்த ஒலி விளைவுகளுக்குக் கண்ணாடிகள் ஒரு பெரிய ஸ்பீக்கருடன் வருகின்றன.

மில்லி விநாடிகளுக்குள் முப்பரிமாண இடஞ்சார்ந்த பரவல் (three-dimensional spatial) கணக்கீட்டைக் கண்ணாடிகள் ஆதரிக்க முடியும். இதன் விளைவாக வாடிக்கையாளருக்கு அதிக இயற்கையான ஏஆர் அனுபவங்கள் கிடைக்கும் என்று ஒப்போ கூறுகிறது. நிறுவனம் தனது கண்ணாடியில் அதிக ஏஆர் அனுபவங்களைக் கொண்டுவர மற்ற பார்ட்னர்களுடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஒப்போ டெவலப்பர் ஏஆர் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்தது. டெவலப்பர்களுக்காக 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒப்போ மொபைல் ஏஆர் மற்றும் கண்ணாடி தளத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Oppo India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment