From 1.4.2023, the unlinked PAN shall become inoperative| பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என வருவான வரித்துறை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மார்ச் 31, 2023க்குள் ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செல்லாது என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2023க்குப் பிறகு 10 இலக்க எண் கொண்ட பான் கார்டு பயன்படுத்த முடியாது, செல்லுபடி ஆகாது எனவும் தெரிவித்துள்ளது. பான் உடன் இணைக்கப்பட்டுள்ள நிதிப் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும். வருமான வரித்துறையில் உள்ள ரிட்டன் நிலுவைத் தொகைகளும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பான்- ஆதார் இணைப்பது கட்டாயம் என வருவான வரித்துறை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இறுதியாக மார்ச் 31, 2023க்குள் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு விலக்கு
சில நபர்களுக்கு மட்டும் பான்-ஆதார் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் வசிக்கும் தனிநபர்களுக்கு விலக்கு. வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் வராத நபர்கள்,
முந்தைய ஆண்டில் 80 மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.
பான் கார்டு குறிப்பாக நிதிப் பரிவர்த்தனை, வரிமான வரித்துறை ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது . வருமான வரி செலுத்தும்போதும், வரி திரும்பப் பெறும்போதும், வருமான வரித் துறையிடமிருந்து தகவல் தொடர்பு பெறும்போதும் பான் எண் பயன்படுத்தப்படுகிறது. ரூ.50,000க்கு அதிகமான வங்கி பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆன்லைனில் எவ்வாறு இணைப்பது?
பான் கார்டை ஆதாருடன் ஆன்லைனில் இணைக்கலாம். அல்லது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து
567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி இணைக்கலாம். வருமான வரித்துறையின் இணைய பக்கத்தில் பைன் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் இணைக்கலாம்.
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் incometax.gov.in/iec/foportalஎன்ற பக்கத்திற்கு செல்லவும்.
2.’Quick Links’ பக்கத்திற்கு சென்று ஸ்க்ரோல் செய்து ‘Link Aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். - இப்போது உங்கள் பெயர், மொபைல் எண், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை குறிப்பிடவும்.
4.’I validate my Aadhaar Details’என்ற விருப்பத்தை கிளிக் செய்து சரிபார்க்கவும். - அடுத்து ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த OTP-யை பதிவிடவும்.
- அபராதக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும்.