ஆதார்- பான் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் ஏராளமான பயனர்கள் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் சென்று ஆதார்- பான் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதைப் பயன்படுத்தி ஆன்லைனில் பண மோசடி நடைபெறுவதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார்- பான் இணைப்பு தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி பெயரில் பண மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக PIB Fact Check ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி பெயரில் அனுப்பபடும் போலி எஸ்.எம்.எஸ், அன்பான வாடிக்கையாளர்களே, உங்கள் ஆதார்- பான் இணைக்கவில்லை என்றால் எஸ்.பி.ஐ வங்கி அக்கவுண்ட் காலாவதி (Expire) ஆகிவிடும். அதனால் உடனடியாக கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி ஆதார்- பான் இணைக்கவும் எனக் குறிப்பிட்டு லிங்க் கொடுக்கப்படுள்ளது.
இது எஸ்.எம்.எஸ் இமெயில் மூலமாக அனுப்பபடுகிறது. எஸ்.பி.ஐ வங்கி பயனர்களின் விவரம் வங்கி தொடர்பான விவரம் ஆகியவற்றை ஒருபோதும் எஸ்.எம்.எஸ் இமெயில் வாயிலாக கேட்காது. வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/