PAN and Aadhaar card Link tamil news: ஆதார் அடையாள அட்டை இந்திய குடிமக்களின் இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே ஆதார் அடையாள அட்டையின் எண்ணை முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதாரை இணைக்காதவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவது கடினம் எனவும், அபாரதங்கள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செயல்படாத பான் அட்டை குறித்து வருமான வரித் துறை கூறுவது என்ன?
செயல்படாத பான் அட்டை வைத்திருப்பவர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அத்தகைய பான் அட்டை வைத்திருப்பவர்கள், பான் அட்டை இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், வருமான வரிச் சட்டம் பிரிவு 272 பி இன் கீழ் ரூ .10,000 அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான கடைசி தேதி
மார்ச் 31ம் தேதி தான் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான கடைசி தேதி என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது
பான் கார்டு: செயல்படாத நிரந்தர கணக்குகளின் விளைவு என்ன?
நீங்கள் ஒரு வங்கிக்குச் சென்று ஒரு கணக்கைத் திறக்க முயற்சித்தால் அல்லது ரூ .50,000 க்கு மேல் பணத்தை டெபாசிட் அல்லது திரும்பப் பெற முயற்சித்தால் உங்கள் பான் கார்டை கொடுக்க வேண்டும். நீங்கள் தவறான அல்லது செயல்படாத பான் கொடுத்தால் உங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். இது போன்று செய்யப்படாத பான் கார்டை கொண்டு நீங்கள் செய்யும் ஒவ்வொரு இணக்கத்திற்கும், வருமான வரித்துறையின் விதிகளின் கீழ், அத்தகைய அபராதம் விதிக்கப்படலாம்.
பான் கார்டு எவ்வளவு முக்கியம்?
வங்கி கணக்கைத் திறப்பது, பரஸ்பர நிதி அல்லது பங்குகளை வாங்குவது மற்றும் ரூ .50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற பல நோக்கங்களுக்காக பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். இருப்பினும், இதுபோன்ற செயல்படாத பான் கார்டுகள் அனைத்தும் பான் அட்டை வைத்திருப்பவர், பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பை மேற்கொள்ளும்போது செயல்படும். இதை ஒரு எஸ்எம்எஸ் மூலம் செய்யலாம்.
பான் மற்றும் ஆதார் அட்டையை எவ்வாறு ஆன்லைனில் இணைப்பது?
பான் மற்றும் ஆதார் அட்டையை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க, 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் வடிவம் ‘யுஐடிபான் (UIDAIPAN) என்று டைப் செய்து, இடம் விட்டு உங்கள் (12 டிஜிட் ஆதார் எண்) மீண்டும் இடம் விட்டு (10 இலக்க பான் எண்) டைப் செய்து அனுப்ப வேண்டும்.
உங்களிடம் உள்ள ஆதார் அட்டை எண் ABCDXXXXXXXXX மற்றும் பான் அட்டை எண் ABCXXXXXXX எனில், எஸ்எம்எஸ் வடிவம் “UIDAIPANABCDXXXXXXXXX ABCXXXXXX” ஆக இருக்கும்.
பான் மற்றும் ஆதார் இணைப்பின் நிலையை எவ்வாறு ஆன்லைனில் செக் செய்வது?
பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பை மேற்கொண்டவர்கள், அவர்களின் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அவர்கள் சரிபார்க்க வேண்டும். அதற்காக அவர்கள் வருமான வரித் துறை வலைத்தளத்தின் நேரடி இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். incometaxindiaefiling.gov.in/aadhaarstatus.
பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘காட்சி இணைப்பு ஆதார் நிலையை’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பான் மற்றும் ஆதார் இணைப்பு நிலை குறித்து உங்கள் கணினி மானிட்டரில் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil