வீடியோகிராஃபிக்கான சிறந்த மிரர்லெஸ் கேமராவை வெளியிட்டு அசத்திய முன்னணி நிறுவனம் !

புகைப்படங்களை எடுப்பதை விட ட்ரைபாடில் வைத்து வீடியோ எடுப்பதற்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் இந்த கேமரா.

By: Updated: May 2, 2019, 06:02:53 PM

Panasonic Lumix S1 review : பழக்கத்தில் இருக்கும் பழங்கால டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களின் ஸ்டிரியோடைப்பில் இருந்து வெளியேறும் முயற்சியில் இயங்கி வருகின்றன கேமரா நிறுவனங்கள். சோனியின் ஆல்ஃபா சீரியஸ் கேமராக்களைத் தொடர்ந்து பேனசோனிக் நிறுவனத்தின் புதிய ஃபுல் பிரேம் மிரர்லெஸ் கேமரா வெளியாகியுள்ளது.

குறைந்த வெளிச்சத்தில் சிறந்த புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேமராக்கள் உதவும். Panasonic Lumix S1, பேனசோனிக் நிறுவனத்தின் முதல் மிரர்லெஸ் கேமராவாகும். பேனசோனிக் நிறுவனத்தில் வரும் முதல் ஃபுல் பிரேம் மிரர்லெஸ் கேமரா இதுவாகும். 47.3MP சென்சார் கொண்ட லுமிக்ஸ் S1R கேமராவும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் 24.2 எம்.பி. கேமரா தொழில்முறை புகைப்படக்காரர்களுக்கு அனைத்து விதமாகவும் உதவும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Panasonic Lumix S1 review

70 எம்.எம். மற்றும் 200 எம்.எம். லென்ஸ்களை பயன்படுத்தும் போது, இந்த கேமராவின் மொத்த எடை 2 கிலோவாக இருக்கிறது. இந்த கேமராவின் பாடி மட்டுமே 1 கிலோ எடை கொண்டுள்ளது என்பதால் இந்த கேமராவை வாங்குவதற்கு முன்பு நிறைய யோசனை செய்ய வேண்டும் நீங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களை எடுப்பதை விட ட்ரைபாடில் வைத்து வீடியோ எடுப்பதற்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் இந்த கேமரா. சிறப்பான வடிவமைப்பு, குயிக் அக்செஸ்ஸிற்காகவே வைக்கப்பட்டிருக்கும் வொய்ட் பேலன்ஸ், ஐ.எஸ்.ஓ மற்றும் எக்ஸ்போசர் பட்டன்கள் இந்த கேமராவிற்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க : 32 MP செல்ஃபி கேமரா… சியோமியின் ட்வீட்டில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?

ஆட்டோ ஃபோக்கஸ் மூலமாக வீடியோ எடுக்கும் போது, குறிப்பிட்ட ஆப்ஜெக்ட் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு மிகவும் வசதியானதாக இருக்கிறது இந்த கேமரா. 4K 60p shooting capabilities – உடன் நீங்கள் வீடியோக்களை எடுக்க இயலும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Panasonic lumix s1 review heavyweight for videography

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X