செல்ஃபி ஃப்ளாஷுடன் களமிறங்கும் பானாசோனிக் பி100 !

பானாசோனிக்கின் தரமான ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் இந்த பி100 மாடல் கட்டாயமாக இடம்பெறும்

பானாசோனிக் நிறுவனத்தின் அடுத்த வரவான பானாசோனிக் பி100 ஸ்மார்ஃபோன் செல்ஃபி ஃப்ளாஷுடன் இந்திய சந்தையில் களமிறங்குகிறது.

ஸ்மார்ட்ஃபோன் உலகில் காலடி எடுத்து வைத்துள்ள பானாசோனிக் நிறுவனம், சமீப காலமாக அசத்தலான வடிவத்தில் ஃபோன்களை வெளியிட்டு மொபைல் பிரியர்களை கவர்ந்து வருகின்றது. இந்திய சந்தையில் முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்கன்வே கடுமையான போட்டி நிலவி வரும் இவ்வேளையில், பானாசோனிக் ஸ்மார்ட்ஃபோன்கள் யூசர்களை கவர பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

பானாசோனிக் ஸ்மார்ஃபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிஃப்ட் வவுச்சர்களை வழங்குவது, கேஷ்பேக் ஆஃபர் என ஒவ்வொரு முறையும் அதன் புதிய மாடல்களுடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த புதன்கிழமை(7.2.18)அன்று, பானாசோனிக் பி100 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்மார்ட்ஃபோன் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 ஜிபி ரேம் கொண்ட பானாசோனிக் பி100 விலை ரூ. 5,299 ஆகும். 2 ஜிபி ரேம் கொண்டது ரூ 5,999 யாக நிர்ணியிக்கப்பட்டடுள்ளது. இரண்டு தினங்களாக ஃபிளிஃப்கார்டில் நடைபெற்ற ஆன்லைன் மொபைல் சேலில் இந்த ஸ்மாட்ர்ஃபோன் இந்திய சந்தைக்கு விலைக்கு வந்தது. தற்போது, இந்த ஃபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள் 10 கிராம் தங்க வெல்லும் வாய்ப்பும் உள்ளதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

*8 மெகா பிக்செல் கேமரா வித் எல்.இ.டி லைட்
*5 மெகா பிக்செல் செல்ஃபி கேமரா வித் செல்ஃபி ஃப்ளாஷ்
*டூயல் சிம் 2200 மெகா பேட்டரி
*5. இன்ச் டிஸ்ப்ளே

இதுக்குறித்து பேசிய ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ஃபோன்களின் தலைமை இயக்குனர் ஐயப்பன் ராஜாகோபால், மிகக்குறைந்த விலையில் தர்மான ஸ்மார்ஃபோன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு  பானாசோனிக் பி100 சரியான தேர்வாகும் என்றார். அத்துடன், பானாசோனிக்கின் தரமான ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் இந்த பி100  மாடல் கட்டாயமாக இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

×Close
×Close