பானாசோனிக் நிறுவனம் தனது புதிய P-சீரிஸ் தொலைக்காட்சிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், முதன்மை தயாரிப்பான ShinobiPro MiniLED உட்பட மொத்தம் 21 LED மாடல்கள் உள்ளன. இதில், 4K Google TV, Full HD மற்றும் HD Ready Google TV வகைகளும் அடங்கும். இந்த புதிய தொடரில், சிறந்த அம்சங்கள் கொண்ட பெரிய ரக டிவிகள் முதல் சிறிய ரக டிவிகள் வரை பல விருப்பங்கள் உள்ளன.
பானாசோனிக் நிறுவனத்தின் புதிய டிவிகளில், மெல்லிய பெசல்கள் (bezel) உள்ளன. இதுதவிர, 4K ஸ்டுடியோ கலர் எஞ்சின், ஹெக்ஸா க்ரோமா டிரைவ், அக்யூவியூ டிஸ்ப்ளே, டால்பி விஷன், டால்பி அட்மாஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் மற்றும் தானியங்கி லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ShinobiPro MiniLED டிவிகள் 65, 75 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இவை, பெசல் இல்லாத வடிவமைப்பையும், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 4K டிஸ்ப்ளேக்களையும் கொண்டுள்ளன. மேலும், சிறந்த வண்ண அனுபவத்திற்காக 4K ஸ்டுடியோ கலர் எஞ்சின், ஹெக்ஸா க்ரோமா டிரைவ் தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. HDR, HDR10+, டால்பி விஷன் போன்ற தொழில்நுட்பங்களையும் இந்த டிவிகள் ஆதரிக்கின்றன. 2025 பானாசோனிக் P-சீரிஸ் டிவிகளின் விலை ரூ.17,990 முதல் ரூ. 3,99,990 வரை உள்ளது. 65-இன்ச் ShinobiPro MiniLED ரூ.1,84,990, 75-இன்ச் ShinobiPro MiniLED TV ரூ.3,19,990. இந்த புதிய மாடல்கள் அனைத்தும் பானாசோனிக்கின் ஆன்லைன், ஆஃப்லைன் கடைகளிலும், சில குறிப்பிட்ட இ-காமர்ஸ் இணையதளங்களிலும் கிடைக்கின்றன.
இந்த ShinobiPro MiniLED டிவிகள், கூகுள் டிவி இயங்குதளத்தில் இயங்குகின்றன. இதில், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய 66W ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்களுடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட ஹோம் தியேட்டர் அமைப்பு உள்ளது. டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பம், ஆழமான ஒலி அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இந்த டிவிகளில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் வசதி மற்றும் குறைந்த லேட்டன்சி கொண்ட பிரத்யேக கேமிங் மோட் ஆகியவை உள்ளன.
பானாசோனிக் ShinobiPro MiniLED டிவிகள், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் வருகின்றன. இது கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்டையும் ஆதரிக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் போன்ற செயலிகள் முன்பே நிறுவப்பட்டுள்ளன. இணைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், 2 USB போர்ட்கள், வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகியவை இதில் உள்ளன.