Advertisment

திடீரென பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்: என்ன நடந்தது?

சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chand 3.jpg

இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் எல்.வி.எம் 3 எம்.4 ராக்கெட் மூலம் ஜூலை 14-ம்  தேதி நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பபட்டது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் திட்டமிட்டபடி பணிகளை செய்து சந்திரயான் -3 மிஷன் வெற்றி பெற்றது. 

Advertisment

இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் 

நுழைந்துள்ளது. எல்.வி.எம் 3 எம்.4 ராக்கெட்டின் கிரையோஜெனிக் மேல் நிலை, பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி புதன்கிழமை மதியம் 2.42மணி அளவில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

"வட பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சாத்தியமான தாக்க புள்ளி காரணமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டள்ளது. ராக்கெட்டின் இறுதி தரைப் பாதை இந்தியாவைக் கடக்கவில்லை” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

LVM3 M4 கிரையோஜெனிக் மேல் நிலையின் பிந்தைய சுற்றுப்பாதை ஆயுட்காலம், இண்டர்-ஏஜென்சி ஸ்பேஸ் டிப்ரிஸ் ஒருங்கிணைப்புக் குழு (ஐஏடிசி) பரிந்துரைத்தபடி, குறைந்த-பூமி சுற்றுப்பாதை பொருட்களுக்கான "25 ஆண்டு விதிக்கு" முழுமையாக இணங்குகிறது என்று கூறியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment