/tamil-ie/media/media_files/uploads/2019/07/2c652834-1d73-11e9-9b66-f8d7b487d426_image_hires_123227.jpg)
lunar eclipse chandra grahan news, lunar eclipse images, tomorrow chandra grahan timing in tamilnadu, நாளை சந்திர கிரகணம், chandra grahan 2020
How to Watch Lunar Eclipse Safely with Kids: இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெற இருக்கும் பகுதிநேர சந்திரகிரகணத்தை (Partial Lunar Eclipse) உங்கள் குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க வேண்டுமா, அதற்கு என்னவெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.
சந்திரகிரகணம் என்றால் என்ன?
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணங்கள் உருவாகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் இந்த சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
பகுதியளவு சந்திர கிரகணம் (அ) நிலவு மறைப்பு (Partial Lunar Eclipse) :
இன்று நள்ளிரவு சரியாக 12:12 மணிக்கு துவங்கும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 01:31 மணிக்கு உச்சம் பெறும் என்றும், அதிகாலை 4 மணி 29 நிமிடத்திற்கு கிரகணம் முழுமை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்வானது பகுதி நேர சந்திர கிரகணம் மட்டுமே. அடுத்த முழுமையான சந்திர கிரகணம் 2021ம் ஆண்டு தான் நிகழும்.
உங்கள் குழந்தைகளுடன் இதனை எப்படி பார்ப்பது?
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை நன்றாக பார்க்க முடியும். உங்கள் குழந்தைகளுக்கு சந்திர கிரகணம் குறித்து சொல்லித் தர இது மிகவும் சரியான காலகட்டம் ஆகும்.
Lunar Eclipse 2019: சந்திர கிரகணம்- சிலிர்ப்பான சுவாரசியங்கள்
இந்த சந்திர கிரகணத்தை நீங்கள் வெற்றுக்கண்களால் காண இயலும். பைனாகுலர், டெலஸ்கோப், அல்லது கேமரா வழியாகவும் இதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த அழகிய காட்சியை புகைப்படம் எடுக்க விரும்பினால் வைட் - ஆங்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் எடுங்கள். மேலும் 5 நொடிகள் வரையில் லாங்க் எக்ஸ்போஷருக்கு கேமராவை வைத்து புகைப்படம் எடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.