Advertisment

Partial Solar Eclipse 2018: பகுதிநேர சூரிய கிரகணம் - இந்தியர்களால் காண இயலுமா?

வடபகுதியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வினை காண இயலும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூரிய கிரகணம், சூரிய கிரகணம் 2018

சூரிய கிரகணம்

Partial Solar Eclipse 2018:  ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி பகுதிநேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. அச்சமயத்தில் சூரியனின் மீது நிலவின் நிழல் விழுவதால் சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கி பின்னர் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படும். உலகம் முழுவது முக்கிய நிகழ்வாக அறிவியலாளர்கள் இதை கவனிக்கிறார்கள்.

Advertisment

பகுதி நேர சூரியகிரகணம்

உலகில் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்வினை காண இயலும். ஆனால் இந்தியாவில் வசிப்பவர்களால் இந்த அரிய நிகழ்வினை காண இயலாது. இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் இந்த கிரகண நிகழ்வு சுமார் மூன்று மணி நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கும்.

நாசா விண்வெளி மைய அறிக்கையின் படி கனடா, வடகிழக்கு அமெரிக்கா, க்ரீன்லாந்து, ஸ்காண்டிநேவியா, சைபீரியா, மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க இயலும். உலகின் வடபகுதியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வினை காண இயலும் என நாசா அறிவிப்பு

சூரிய கிரகணம் பார்க்கும் முறை:

வெற்றுக் கண்ணால் பார்ப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் முடிந்தவரை இந்நிகழ்வுகளை பார்ப்பதற்கென வழங்கப்படும் கண்ணாடிகளை வாங்கி அதன் வழியாக பார்ப்பது நலம் என்று நாசா தெரிவித்திருக்கிறது.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சந்திரகிரகண நிகழ்வினை நாசா நேரலையாக பதிவு செய்தை தற்போது செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.

இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Solar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment