கூகுளுக்கு சவால்விடும் பேடிஎம்… மினி ஆப் ஸ்டோர் வெளியீடு

டெகாத்லான், டோமினோஸ் பீஸ்ஸா, ஃப்ரெஷ்மெனு, நெட்மெட்ஸ், நோ பிரோக்கர் மற்றும் ஓலா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சேவை வழங்குநர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By: October 6, 2020, 9:19:17 PM

Paytm Tamil News latest: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சில நாட்களுக்குள், கடந்த திங்களன்று தனது ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியிருக்கிறது Paytm. இது இந்திய டெவலப்பர்களின் தயாரிப்புகளை ஆதரிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெகாத்லான், டோமினோஸ் பீஸ்ஸா, ஃப்ரெஷ்மெனு, நெட்மெட்ஸ், நோ பிரோக்கர் மற்றும் ஓலா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சேவை வழங்குநர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் மினி ஆப் ஸ்டோரையும் அணுகுவார்கள் என்றும் Paytm நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மினி செயலி அல்லது முற்போக்கான வெப் செயலிகள், அவற்றைப் பதிவிறக்கம் செய்யாமல் மொபைல் வலைத்தளங்களில் நேரடியாகப் பயன்படுத்தும் அனுபவத்தை வழங்கும். Paytm தனது சொந்த செயலியில் பயன்பாடுகளுக்கான பட்டியல் மற்றும் விநியோகத்தை இலவசமாக வழங்கும். டெவலப்பர்கள் தங்கள் பயனர்களுக்கு Paytm Wallet, Paytm Payments Bank, UPI, Net Bank மற்றும் கார்டுகள் போன்ற பல்வேறு கட்டண விருப்பங்களை வழங்குகிறார்கள்.

“இளம் இந்திய டெவலப்பர்களுக்கு புதுமையான சேவைகளை உருவாக்குவதற்கான தலமாக Paytm மினி ஆப் ஸ்டோர் இருக்கிறது. Paytm பயனர்களைப் பொறுத்தவரை, இது அவர்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட பதிவிறக்கமும் இல்லாத தடையற்ற அனுபவமாக இருக்கும். மேலும், அவர்கள் விரும்பும் கட்டண விருப்பத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவுகிறது ”என்று Paytm நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா கூறினார்.

கார்ட்னரின் மூத்த ஆராய்ச்சி இயக்குநர் மஞ்சுநாத் பட், மற்ற உடனடி பயன்பாடுகளிலிருந்து Paytm வேறுபட்டது. மேலும், இந்தியத் தொடக்க நிறுவனங்கள் அவற்றின் பயன்பாட்டை விரிவாக்க உதவும். “செயலி வழங்குநர்கள் தங்கள் சேவைகளுக்கு வழங்கக்கூடிய மற்றொரு அனுபவமாக இதை நான் கருதுகிறேன். இந்தியாவின் சிறந்த செயலியான WeChat-க்கு சமமானதாக Paytm இருக்கும்… இந்த மினி செயலிகளுக்குச் சேவை செய்வதற்கான அடித்தளமாக PayTM உருவானது. அவை அடிப்படையில் வெப் செயலிகள்தான். எனவே, Formjacking போன்ற அதே வலை பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இங்கே பொருந்தும்”என்று அவர் மேலும் கூறினார்.

FE-யுடன் பேசிய Paytm துணைத் தலைவர் நரேந்திர யாதவ், “மினி ஆப் ஸ்டோர் என்பது பல ஆண்டுகளாக நாங்கள் பெற்ற அனுபவத்தை இப்போது நாங்கள் டெவலப்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பெரும் தொகையைச் செலவழித்த பின்னரே பயனர்களைப் பெற்றோம். இன்று, Paytm-ல் ஒவ்வொரு மாதமும் சுமார் 150 மில்லியன் பயனர்கள் வருகை தருகின்றனர். இப்போது, ஒவ்வொரு சிறிய டெவலப்பருக்கும் பயனர்களுக்கான அணுகல் சாத்தியம்” என்று குறிப்பிட்டார்.

HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறிய டெவலப்பர்கள் குறைந்த விலையில், விரைவாக உருவாக்கக்கூடிய மினி செயலிகளை உருவாக்க பேடிஎம்மின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உதவும் என்று யாதவ் கூறினார். இது கட்டணமில்லா Paytm Wallet, Paytm Payments Bank account மற்றும் UPI-ஐ வழங்குகிறது. மேலும், கிரெடிட் கார்டுகள் போன்ற பிற கருவிகளுக்கு 2% கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

IOS பயனர்களுக்கு மினி-ஆப் ஸ்டோருக்கான திட்டங்கள் குறித்துக் கேட்டபோது, “தற்போது, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 98% பேர் இங்கு இருப்பதால் நாங்கள் Android -ஐ குறிவைத்துள்ளோம். IOS பற்றிச் சிந்திக்கிறோம்” என்றார்.

நூற்றுக்கணக்கான டெவலப்பர்களுடன் Paytm கலந்துரையாடி வருவதாக யாதவ் மேலும் கூறினார். “நாங்கள் இன்று செயலியை வெளியிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து டெவலப்பர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கேள்விகளையும் பெறுகிறோம். அடுத்த சில நாட்களில், ஆயிரக்கணக்கானோர் எங்களுடன் சேருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என நம்புகிறார்.

ஒரு முழுமையான ஆப் ஸ்டோரை உருவாக்கும் போது, “மினி-ஆப் ஸ்டோரிலிருந்து ஆப் ஸ்டோருக்கு செல்லும் பயணம் நேரடியானது இல்லை. நாங்கள் இப்போது அந்த பகுதியைப் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார் யாதவ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Paytm challenges google and launched mini app store paytm tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X