New Update
/indian-express-tamil/media/media_files/jByV1jYP2NXEVJohg8Gf.jpg)
00:00
/ 00:00
மார்ச் 15க்குப் பிறகு Paytm FASTag கணக்கு செயல்படாது. பே.டி.எம் பேமண்ட்ஸ் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய முடியாது. பயப்பட வேண்டாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) சமீபத்தில் Paytm Payments வங்கி மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது, பிப்ரவரி 29-க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிலும் டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் FASTag டாப்-அப்கள் செய்வதை நிறுத்துமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் பயனர்களின் நலன் கருதி இந்த காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிறுவனம், டாப்-அப்கள், ப்ரீபெய்ட் கருவிகள், வாலட்கள், National Common மொபிலிட்டி கார்டுகள், ஃபாஸ்டேக்குகள் மற்றும் பல்வேறு சேவைகளை தடை செய்துள்ளது.
மார்ச் 15-க்குப் பிறகு என்ன ஆகும்?
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) PayTM Payments Bank Ltd (PPBL) ஐ அதன் அங்கீகரிக்கப்பட்ட FASTag வழங்குநர்களின் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
தற்போதுள்ள PayTM FASTags, இருப்புத் தொகை தீரும் வரை தொடர்ந்து செயல்படும், தடை அமலுக்கு வந்த பிறகு பயனர்கள் தங்கள் FASTag கணக்குகளுக்கு பேடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாது.
இந்த நிலையில் நீங்கள் பே.டி.எம் ஃபாஸ்டேக் கணக்கு மூடி புதிதாக நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரித்துள்ள வங்கி கணக்கு மூலம் புதிய ஃபாஸ்டேக் கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட FASTag வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது.
Travel hassle-free with FASTag! Buy your FASTag today from authorised banks.@NHAI_Official@MORTHIndia pic.twitter.com/LI7xpMwfr4
— FASTagOfficial (@fastagofficial) February 16, 2024
பே.டி.எம் ஃபாஸ்டேக் அக்கவுண்ட் டீஆக்டிவேட் (deactivate) செய்வது எப்படி?
இது உங்களுக்ககு சிரமமாக இருந்தால் உங்கள் மொபைலில் இருந்து 1800-120-4210 என்ற எண்ணை டயல் செய்து, வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியிடம் உங்கள் டேக் ஐடி அல்லது வாகனப் பதிவு எண்ணுடன் (VRN) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைச் சொல்லி அக்கவுண்ட் டீஆக்டிவேட் செய்யலாம்.
புதிய FASTag ஆக்டிவேட் அல்லது பெறுவது எப்படி?
புதிய FASTag பெற நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரித்துள்ள 32 வங்கிகளில் இருந்து ஆன்லைனில் புதிதாக FASTag அட்டை வாங்கலாம் அல்லது NHAI இணையதளத்தில் இருந்து நேரடியாக ஆர்டர் செய்து பெறலாம். ஆன்லைனில் பாஸ்டேக் பெற ‘My FASTag’ என்ற ஆப்பை கூகுள் பிளே-ல் டவுன்லோடு செய்து பெறலாம்.
1. ‘My FASTag’ டவுன்லோடு செய்து ஓபன் செய்து ‘Activate FASTag’ ஆப்ஷன் கொடுக்கவும்.
2. இங்கு நீங்கள் அமேசான் அல்லது பிளிப்கார்ட் வழியாக பயன்படுத்தும் ஆப்ஷன் கொடுக்கவும்.
3. இப்போது நீங்கள் FASTag ID டைப் செய்யவும் அல்லது QR code ஸ்கேன் செய்யவும்.
4. இப்போது, உங்கள் வாகன பதிவு எண் போன்ற விவரங்களை உள்ளிடவும். இதை செய்த பின் உங்கள் புதிய FASTag ஆக்டிவேட் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.