ஒரே கிளிக்கில் ஆல் அக்கவுண்ட்ஸ்; ஒன் பேலன்ஸ்.. இனி பேலன்ஸ் செக் பண்றது ரொம்ப ஈசிதான்!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் தளமான Paytm, யுபிஐ (UPI) இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கான Total Balance Check அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் தளமான Paytm, யுபிஐ (UPI) இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கான Total Balance Check அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Paytm

Paytm-ல் ஒரே கிளிக் ஆல் அக்கவுண்ட்ஸ்; ஒன் பேலன்ஸ்.. இனி பேலன்ஸ் செக் பண்றது ரொம்ப ஈசிதான்!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் தளமான Paytm, யுபிஐ (UPI) இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கான Total Balance Check அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், பயனர்கள் தங்கள் Paytm செயலியில் யு.பி.ஐ. மூலம் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளின் தனிப்பட்ட பேலன்ஸ் மற்றும் டோட்டல் பேலன்ஸை ஒரே இடத்தில் பார்க்கும் வசதியை வழங்குகிறது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

முன்பு, பயனர்கள் ஒவ்வொரு வங்கிக் கணக்கின் இருப்பையும் தனித் தனியாகச் சரிபார்த்து, அதன் மொத்த தொகையைத் தாங்களாகவே கூட்ட வேண்டியிருந்தது. ஆனால், Paytm-ன் இந்த புதிய வசதி, பயனர்களின் சிரமத்தைக் குறைத்து, அவர்களுக்குத் தேவையான டோட்டல் பேலன்ஸை உடனடியாகக் காட்டுகிறது. குறிப்பாகச் சேமிப்பு, அன்றாடச் செலவுகள் (அ) சம்பளக் கணக்கு எனப் பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது?

Advertisment
Advertisements

Paytm செயலியில் இந்த "மொத்த இருப்புச் சரிபார்ப்பு" அம்சத்தை அணுகுவது மிகவும் எளிது. இதற்கான வழிமுறைகள் பின்வருமாறு;

உங்கள் Paytm செயலியைத் திறந்து, Balance & History பிரிவுக்குச் செல்லவும். உங்கள் வங்கிக் கணக்குகள் யுபிஐ மூலம் ஏற்கனவே Paytm-ல் இணைக்கப்படவில்லை என்றால், அவற்றை இணைக்கவும். பிறகு, ஒவ்வொரு கணக்கின் இருப்பையும் சரிபார்க்க உங்கள் யுபிஐ பின்னை (UPI PIN) உள்ளிடவும். இப்போது, திரை மேலே, உங்கள் Paytm-ல் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிக்கணக்குகளின் டோட்டல் பேலன்ஸ் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள்:

இந்த புதிய அம்சம் யுபிஐ பின் சரிபார்ப்புடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் நிதித் தகவல்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. Paytm செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "டோட்டல் பேலன்ஸ் அம்சம், பயனர்கள் தங்கள் நிதிச் செலவுகளைக் கண்காணிக்கவும், சேமிப்புகளை நிர்வகிக்கவும், தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது" என்று தெரிவித்தார்.

டோட்டல் பேலன்ஸ் அம்சத்துடன் சேர்த்து, Paytm பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பணப் பரிமாற்றங்களை மறைக்கும் வசதி (கூடுதல் தனியுரிமைக்காக). பணத்தை விரைவாகப் பெறுவதற்கான முகப்புத் திரை விட்ஜெட் (Home Screen Widget). பயனர்கள் தங்கள் யுபிஐ ஐடிகளைத் தனிப்பயனாக்கும் வசதி. மொபைல் எண்களை மறைக்கும் வசதி. யுபிஐ அறிக்கைகளை எக்செல் (Excel) அல்லது PDF வடிவங்களில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஆகியன ஆகும்.

Paytm, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பிரான்ஸ், மொரிஷியஸ், பூடான், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற சில வெளிநாடுகளில் இந்தியர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளையும் ஆதரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட Paytm (One97 Communications Limited-ல் இயக்கப்படுகிறது), தற்போது இந்தியாவில் கட்டண மற்றும் நிதிச் சேவைகள் விநியோகத்தில் முக்கிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. மொபைல் கட்டணங்கள் மற்றும் க்யூஆர் (QR) குறியீடுகளின் முன்னோடியாகவும் Paytm திகழ்கிறது.

Technology Paytm

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: