100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 40 ரூபாயை கேஷ்பேக்காக பெறலாம்…

Rs 7500 Cashback Offer on Petrol, Diesel Payment : டிஜிட்டல் வாலெட்டுகள் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகளை குறைக்க புதிய வழி

By: Updated: October 6, 2018, 03:53:04 PM

பெட்ரோல் டீசல் விலை : கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகவும் வருத்தமடைந்து வருகின்றனர். விளிம்பு நிலை மக்கள் மற்றும் சாமனியர்களால் சமாளிக்க இயலாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வந்தது. சென்னையில் 85 ரூபாயை கடந்தது கச்சா எண்ணெய் விலை.

பெட்ரோல் டீசல் விலை – கேஷ்பேக் ஆஃபர்

நேற்று ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. இது போன்ற ஏற்ற இறக்க நிலைகளை சமன் செய்ய பெட்ரோல் மற்றும் டீசலை டிஜிட்டல் வாலெட்டுகள் மூலம் வாங்கினால் கேஷ்பேக் சலுகை தரலாம் என்று முடிவு செய்திருக்கிறது. குறைக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலையைப் பற்றிய செய்தியைப் படிக்க

இந்த சலுகை கணிசமான பணத்தினை பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகளில் இருந்து மிச்சப்படுத்தலாம். பேடிஎம், ஃபோன்பே, மற்றும் மொபிவிக் போன்ற டிஜிட்டல் வாலட்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் வாங்கினால் ரூபாய் 7500 வரை கேஷ்பேக் பெறலாம்.

பேடிஎம்

பேடிஎம் மூலமாக ரூபாய் 7500 வரை வாடிக்கையாளர்கள் கேஷ் பேக்கினை பெற இயலும். இந்த சலுகைக்கான வேலிடிட்டி அடுத்த வருடம் 01/08/2019 வரை ஆகும். இந்த சிறப்புச் சலுகையை பெறுவதற்கு குறைந்த பட்சம் ரூபாய் 50ற்காவது ஒருவர் பெட்ரோல் போட வேண்டும். ஒவ்வொரு 10வது ட்ரான்சக்சன் மூலமாக 1350 ரூபாய் வேலட்டில் ஆட் செய்யப்படும் என்று பேடிஎம் கூறியிருக்கிறது.

மொபிவிக்

குறிப்பிட்ட சில பெட்ரோல் பேங்குகளில் மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகையினை பெற இயலும். இதன் வேலிடிட்டி வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வரையே. ஒவ்வொரு முறையும் 50 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் போடப்படும் போது ஆந்த பணத்தில் இருந்து 25% கேஷ் பேக்கினை பெற இயலும். ஆனால் இந்த கேஷ்பேக்கில் பெறப்படும் பணத்தை ஒரு மாதம் கழித்து தான் பயன்படுத்த இயலும்.

ஃபோன்பே

ஒவ்வொரு முறையும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பேங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் அல்லது டீசல் போட்டால் அதில் 40 ரூபாய் வரை கேஷ் பேக் பெறலாம். இந்துஸ்தான் பெட்ரோலியம் பேங்க்குகளில் போட்டால் 35 ரூபாய் வரை கேஷ் பேக் பெறலாம். இந்த ஆஃபார் வருகின்ற டிசம்பர் 31 வரை மட்டுமே.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Petrol diesel fuel payment via paytm mobikwik and phonepe and get rs 7500 cashback

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X