Peugeot Metropolis 2020 has been added to the Presidential Fleet at the Elysee Palace :ஒரு நாட்டின் முதல் குடிமகன் என்பவர் அந்நாட்டின் அதிபர் தான். அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மிக முக்கியமானதாக ஒவ்வொரு நாடுமே கருதும். பாதுகாப்பு அதிகாரிகள், அதிபர் பாதுகாப்பிற்கு அதிக அளவில் சிரத்தை மேற்கொள்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மகேந்திரா நிறுவனத்தின் பிஜோட் மெட்ரோபோலிஸ் (Peugeot Metropolis) என்பது ஒரு மூன்று சக்கர வாகனமாகும். ஏற்கனவே இந்த மூன்று சக்கர வாகனங்கள் சீனாவின் ஸ்வாட் அணியில் இடம் பெற்று பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இம்மானுவேல் மாக்ரோனின் பாதுகாப்பிற்காக அந்த அணியில் இடம் பெற்றுள்ளது பிஜோட் மெட்ரோபோலிஸ் மூன்று சக்கர வாகனம். ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு மகேந்திரா ரைஸ் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, பிஜோட் பெயரில் தயாரித்து வருகிறது.
இந்த மெட்ரோபோலிஸ் மூன்று சக்கர வாகனம் இம்மாதத்தின் துவக்கத்தில் ஃபிரான்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மகேந்திரா குழுமத்தின் சர்வதேச செயல்பாட்டு நிர்வாகி பிரகாஷ் வகன்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஃபிரான்ஸ் நாட்டில் இருக்கும் அதிபர் மாளிகையான எலிசீ முன்பு இந்த மெரோபோலிஸ் மூன்று சக்கர வாகனம் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதனை குறித்து கருத்து தெரிவித்த ஆன்ந்த் மகேந்திரா, இதே போன்ற மூன்று சக்கர வாகனங்களை இந்தியாவில் எப்போது வெளியிட போகின்றோம் என்று கேள்வி கேட்டு, ரி-ட்வீட் செய்துள்ளார். ஃபிரான்ஸ் நாட்டில், அதிபர் பாதுகாப்பிற்காக சேர்க்கப்பட்ட இரண்டாவது ஸ்கூட்டர் வகை இதுவாகும். இதற்கு முன்பு இ-லுடிக்ஸ் என்ற ஸ்கூட்டர் 2019ம் ஆண்டு பாதுகாப்பு குழுவில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil