Advertisment

சூரிய ஒளி மூலம் இயங்கிய ஆளில்லா விமானம்... விரைவில் பயணிகளை அழைத்துச் செல்ல திட்டம்!

இந்த வகை விமானங்களால் ஒரு வருடம் முழுவதும் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள stratosphere ல் இயங்க முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PHASA 35 Solar powered unmanned aircraft flies successfully

PHASA 35 Solar powered unmanned aircraft flies successfully

PHASA 35 Solar powered unmanned aircraft flies successfully : Persistent High Altitude Solar Aircraft (PHASA-35) விமானத்துக்கு ஒரு வருடம் வரை வானத்தில் பறக்கும் ஆற்றல் உண்டு. மேலும் வானிலை மற்றும் வழக்கமான விமான போக்குவரத்துக்கு மேலே stratosphere க்குள் ஆள் இல்லாமல் இயங்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. PHASA-35 விமானம் தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இந்த வகை விமானங்கள் செயற்கைக்கோளுக்கு மலிவான மாற்றாகவும் அதேசமயம் விமானத்தின் நெகிழ்வுடனும் இணைந்து இருக்கும். மேலும் இந்த விமானங்கள்

Advertisment

தீ விபத்து கண்டுபிடிப்பு மற்றும் கடல்வழி கண்காணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். செயற்கைகோள் மற்றும் விமான தொழில்நுட்பத்துக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் விதமாக இந்த PHASA-35 விமானம் 35 மீட்டர் இறக்கை நீளத்துடன் சூரிய மின் சக்தியில் தனது முதலாவது வின் பயணத்தை முடித்து, வான் மற்றும் வின்வெளி சந்தையில் ஆட்டத்தையே மாற்றியமைக்கக் கூடியதாக வழிவகுத்துள்ளது.

இரண்டு வருடத்துக்கும் குறைவான கால அளவில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு, பறந்த இந்த PHASA-35 வகை விமானம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த BAE Systems மற்றும் Prismatic Ltd நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பாகும். இங்கிலாந்தின் Defence Science and Technology Laboratory (DSTL) மற்றும் Australian Defence Science and Technology Group (DSTG) ஆகிய நிறுவனங்களின்படி இந்த விமானத்தின் வெற்றிகரமான சோதனை ஓட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Royal Australian Air Force (RAAF) Woomera range ல் நடைபெற்றுள்ளது. PHASA-35 இன் முதல் முழு ஒருங்கினைந்த விமான சோதனை, இந்த வகை விமானம் தனது வடிவமைப்பு நிலையிலிருந்து வெறும் 20 மாதங்களில் சோதனை ஓட்ட நிலைக்கு வெற்றிகரமான சென்றுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி!

சூரிய சக்தி

High Altitude Long Endurance (HALE) வாகனமான இது பகலில் சூரிய சக்தி மூலமும், இரவு முழுவதும் பேட்டரிகள் மூலமும் இயங்கும். நீண்ட நாள் பயன்படக் கூடிய பேட்டரி மற்றும் ஆற்றல்மிக்க சூரிய சக்தி தொழில்நுட்பத்தால், இந்த வகை விமானங்களால் ஒரு வருடம் முழுவதும் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள stratosphere ல் இயங்க முடியும். இந்த வருடத்தின் பிற்பகுதியில் இந்த விமானத்தின் அடுத்தக்கட்ட சோதனை ஓட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அவை முடிந்து 12 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களின் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கு இந்த விமானங்கள் வரும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment