/indian-express-tamil/media/media_files/XQBNlHwJLnV1k1wrMsd7.jpg)
ஃபிஷிங் மோசடிகளால் மில்லியன் கணக்கான மக்கள் பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகளை இழந்துள்ளனர். இது வாட்ஸ்அப் போன்ற பிரபலமான தளத்திலும் நடந்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் தனது பிஷிங் மோசடிகளில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
புதிய வாட்ஸ்அப் அம்சம் பயனர்கள் மெசேஜை திறப்பதற்கு முன்பே ப்ளாக் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு வாட்ஸ்அப் தளத்தில் நிகழும் ஃபிஷிங் மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு செய்கிறது. ஃபிஷிங் முயற்சியை எவ்வாறு அடையாளம் காண்பது, மெசேஜில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழைகள், பயனர்களின் தனிப்பட்ட தகவலை கேட்பது, லிங்கினை கிளிக் செய்ய சொல்வது போன்றவற்றில் விழிப்புணர்வு செய்கிறது.
புதிய அம்சம்
தற்போது அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சம் தெரியாத எண் (unknown number)-ல் இருந்து வரும் மெசேஜ்களை ஓபன் செய்யாமலேயே ப்ளாக் செய்ய முடியும். இதில் 2 ஆப்ஷன்களை மெட்டா வழங்குகிறது. 1. பதிலளித்து உங்கள் Contact-ல் சேர்ப்பது மற்றொன்று ப்ளாக் செய்து அந்த எண்ணை ரிப்போர்ட் செய்வதாகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.