போன்பே (PhonePe) முன்னனி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியாகும். ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் குறைந்த தொகை கொண்ட பரிவர்த்தனைகளை எளிதில் செய்து முடிக்க UPI Lite என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPI லைட் அம்சம் பயனர்கள் சிறிய தொகை கொண்ட பரிவர்த்தனைகளை விரைவாகவும் எளிதாகவும் செலுத்த அனுமதிக்கிறது.
UPI லைட் அம்சம் பயன்படுத்தி பின் நம்பர் பதிவிடாமல் ரூ.200 வரையிலான பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்த அம்சம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் பரிவர்த்தனை தோல்விகளைக் (transaction failures) குறைக்கும் என்று போன்பே தெரிவித்துள்ளது. மளிகை கடைகள், காபி கடைகளில் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை செய்ய இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். வழக்கம் போல க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பரிவர்த்தனை செய்யலாம்.
PhonePe UPI Lite எவ்வாறு பயன்படுத்துவது?
PhonePe UPI Lite பயன்படுத்த தனி செயலி எதுவும் டவுன்லோடு செய்யத் தேவையில்லை. ஏற்கனவே உங்களிடம் உள்ள PhonePe செயலியை அப்டேட் செய்தால் போதுமானது.
- முதலில் உங்கள் போன்பே செயலியை ஓபன் செய்யவும்.
- அடுத்து home screen பக்கத்தில் UPI லைட் இயக்குவதற்கான விருப்பத்தை எனேபில் செய்யவும்.
- UPI Lite-ல் add செய்வதற்கான தொகையை உள்ளிட்டு உங்கள் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிடவும்.
- உங்கள் UPI பின்நம்பரை உள்ளிடவும். உங்கள் UPI லைட் கணக்கு வெற்றிகரமாக தொடங்கப்படும்.
பயனர்கள் போன்பே லைட் அம்சத்தில் முன்பே பணம் செலுத்தி (Wallets அம்சம் போன்று) வைத்து தான் பரிவர்த்தனை செய்ய முடியும். ரூ.2000 வரை பணம் செலுத்திக் கொள்ளளலாம். ரூ.200 வரை UPI லைட் பரிவர்த்தனை செய்யலாம். இந்த பரிவர்த்தனைகளுக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பபடும். UPI லைட் கணக்கில் தெரிவிக்கப்படும். உங்கள் வங்கி கணக்கில் பரிவர்த்தனை விவரங்கள் இடம் பெறாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“