சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் எது ?

போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் நாம் அனைவருக்கும் பொதுவான விருப்பமாக அமைந்து விட்டது புகைப்படம் எடுப்பது. புகைப்படம் எடுப்போம். எடுத்ததும் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என அனைத்திலும் போட்டோவை போட்டு நண்பர்களை டேக் செய்து நம்முடைய புகைப்படம் எடுக்கும் திறனை உலகிற்கே சொல்லிட விரும்புவோம்.

என்னதான் புகைப்படம் எடுத்தாலும் அது எடிட்டிங் செய்தால் அதன் வெளிப்பாடு வித்யாசமாகவும் கண்ணைக் கவரும் விதமாகவும் அமையும் என்பதையும் மறுக்க முடியாது. அனைவரிடமும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் இருக்கின்றது. ஆனாலும் சிறந்த எடிட்டிங் அப்ளிகேசன்களை கண்டறிந்து பயன்படுத்துவது நமக்கும் சிரமமாக இருக்கும் என்பதும் உண்மை.

சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் எது?

அலைபேசிகளுக்கான லைட்ரூம் சிசி (Lightroom CC for Mobile)

இங்கு பெரும்பாலானவர்களுக்கு லைட் ரூம் சிசியின் கணினி வெர்சன் தெரியும். அதே சிறப்பம்சங்களுடன் தான் லைட்ரூம் சிசி மொபைலிற்குமானது வெளிவருகிறது. இதில் டிஜிட்டல் அஸ்ஸெட் மேனேஜர் இருக்கிறது. இந்த சிறப்பம்சங்களை வைத்துக் கொண்டு RAW போட்டோக்களையும் எடிட் செய்யலாம். இந்த அப்ளிகேசனில் இருந்தே DNG வகை போட்டோக்களை எடுக்க இயலும்.

போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள்

adobe Photoshop Lightroom CC

ஸ்நாப்சீட் (Snapseed)

கூகுள் நிறுவனம் வழங்கும் போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் மத்தியில் மிகவும் பெயர் பெற்றது இந்த ஸ்நாப்சீட். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரண்டு வகையான இயங்கு தளங்களில் இயங்கும் அலைபேசிகளிலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

போட்டோவின் பிரைட்னஸ், ஆம்பியன்ஸ் மற்றும் ஷார்ப்பனிங் ஆகியவற்றை மிக எளிதான முறையில் செய்ய இயலும் இந்த அப்ளிகேசன் மூலமாக. 29 முக்கியமான சிறப்பம்சங்களுடன் வரும் இந்த அப்ளிகேசனில் ஹீலிங் மற்றும் எச்.டி.ஆர் போன்ற எடிட்டிங்குகளையும் செய்து கொள்ளலாம்.

போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள்

snapseed

VSCO

VSCO என்ற அப்ளிகேசனை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. அதில் 50 ஃபில்டர்கள் இருக்கின்றன. இந்த அப்ளிகேசன்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களிலும் சிறப்பாக இயங்குகிறது.

டெம்பரேச்சர், காண்ட்ராஸ்ட் ஆகியவற்றை மாற்றும் சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது இந்த அப்ளிகேசன். இந்த VSCO அப்ளிகேசனிலேயே புகைப்படும் எடுக்கும் வசதியும் இருப்பதால் நீங்கள் எடுக்கும் RAW போட்டோவினை எடிட் செய்து கொள்ளலாம்.

போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள்

vsco

ProCam5

ஸ்டில் போட்டோ எடுப்பதற்கும், RAW ஃபார்மெட் போட்டோ எடுப்பதற்கும், வீடியோ ரெக்கார்ட் செய்வதற்கும் மிகவும் வசதியான ஒரு அப்ளிகேசன் என்றால் அது ProCam5 தான். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது இந்த ப்ரோகேம் 5.

லைட்ரூம் மற்றும் ஸ்நாப்சீட் போன்றே எளிமையான முறையில் இந்த அப்ளிகேசன்களை பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தகக்து.

போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள்

procam-5

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close