இந்தியா போஸ்ட் வங்கி போல் போலி எஸ்.எம்.எஸ் அனுப்பி பான் கார்டு மோசடியில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB) எச்சரிக்கை விடுத்துள்ளது.
"வாடிக்கையாளரே உங்க இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. உடனடியாக உங்க பான் கார்டை அப்டேட் செய்யுங்கள். இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் https://surl.li/iccpf " என்று கூறி எஸ்.எம்.எஸ் அனுப்பபடுகிறது. இது போலியான எஸ்.எம்.எஸ்,
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி இதுபோன்று எஸ்.எம்.எஸ் அனுப்பாது என்று PIB தெரிவித்துள்ளது.
மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி?
1. சந்தேகத்திற்குரிய நிறுவனம் அல்லது தனிநபர் பெயர்களில் எஸ்.எம்.எஸ், மெயில் வந்தால் அதில் லிங்க் எதுவும் இருந்தால் கிளிக் செய்ய வேண்டாம்.
2. இதுபோன்று ஏதோ நிறுவனத்திடம் இருந்து சந்தேகத்திற்குரிய எஸ்.எம்.எஸ், மெயில் வந்தால் அந்த நிறுவனம் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்க வேண்டும். இணையதளத்தை செக் செய்ய வேண்டும்.
3. அடுத்து, உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றை பகிரக் கூடாது. சந்தேகத்திற்குரிய மெசேஜை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
4. உங்கள் போனை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“