Advertisment

மக்களே உஷார்! "பிங்க் வாட்ஸ்அப்" இந்த லிங்கை தொடாதீங்க; போலீசார் எச்சரிக்கை

பிங்க் வாட்ஸ்அப், டாடா மோட்டர்ஸ் 15-ம் ஆண்டு என்று வருகின்ற லிங்கை தொட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Whatsapp Scam

Whatsapp Scam

புதுச்சேரி சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி இன்று (ஜுன் 14) கூறியதாவது, பிங்க் வாட்ஸ்அப் (Pink whatsapp) என்ற பெயரில் வரும் லிங்க்கை தொட வேண்டாம். மற்றவர்களுக்கும் பகிர வேண்டாம். டாடா மோட்டர்ஸ் (TATA Motors) 15-ம் ஆண்டு என்று வருகின்ற லிங்கை தொட வேண்டாம் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் மிக எளிதில் ஹேக் செய்யப்பட்டு உங்களுடைய வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு மேலும் உங்களுடைய மொபைல் போனும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும்.

பிங்க் வாட்ஸ்அப் அல்லது உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத நபர்கள் அனுப்பும் எந்த லிங்கையும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி கிளிக் செய்வதனால் APK FILE உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்கள் தகவல்கள் திருடப்பட்டு விடும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment