இந்த போனின் சிறப்பம்சம் என்பது இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கெவ்லர் ஃபைபர் ஆகும். மற்ற வேரியண்ட்களில் பயன்படுத்தப்படும் பாலிகார்பனேட் போன்று இல்லாமல், வித்தியசமான டெக்சர் மற்றும் பினிசிங்குடன் வெளியாகியுள்ளது இந்த போன்.
Poco F1 Armoured edition ஸ்டோரேஜ் சிறப்பம்சங்கள்
இதன் ஒரிஜினல் வெர்சனான போக்கோ எஃப் 1 (Poco F1 ஆர்மர்ட் எடிசனின்)-ன் ஸ்டோரேஜ்ஜானது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆகும் . இந்த போன் இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியானது. அப்போது அதன் விலை ரூ. 29,999. ஆனால் தற்போது வெளியானது 6ஜிபி/128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டது.
மேலும் படிக்க : 2018ம் ஆண்டு வெளியான இன்னோவேட்டிவ் போன்கள் ஒரு பார்வை
Poco F1 Armoured edition விற்பனை
Mi.com மற்றும் ப்ளிப்கார்ட் வர்த்தக இணைய தளங்களில் இன்று நள்ளிரவில் இருந்து விற்பனையாகிறது இந்த போன்.
இதர சிறப்பம்சங்கள்
6.18 இன்ச் ஃபுல் எச்.டி திரை கொண்டது இந்த போன்.
எல்.சி.டி டிஸ்பிளேவுடன் வெளியாகும் இந்த போனின் ஸ்கீரின் டூ டிஸ்பிளே ரேசியோ 18.7:9
நோட்ச் டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளியானாலும், அந்த வசதியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்திக் கொள்ள செட்டிங்க்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் மற்றும் அட்ரெனோ 630 ஜி.பி.யூ இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 10 இயங்கு தளத்தில் செயல்படுகிறது போக்கோ போன்.
பேட்டரியின் சேமிப்புத் திறன் 4000 mAh
போக்கோ போனின் கேமரா செயல் திறன் 12 எம்.பி+5 எம்.பி. செல்ஃபி கேமராவின் செயல் திறன் 20 எம்.பி
விலை
6GB RAM / 64 GB storage போனின் விலை - ரூ. 19,999 (ஆர்மர்ட் எடிசன் கிடையாது)
6GB RAM / 128 GB storage போனின் விலை - ரூ. 22,999 (ஆர்மர்ட் எடிசன் கிடையாது)
8GB RAM / 256 GB storage போனின் விலை - ரூ. 27,999 (ஆர்மர்ட் எடிசன் கிடையாது)
8GB RAM / 256 GB storage போனின் விலை - ரூ. 28,999 (ஆர்மர்ட் எடிசன்)