ரெட் மி நிறுவனத்தின் Poco F6 ஸ்மார்ட் போன் மே 23 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் உடன் ப்ரோ வெர்ஷன் போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Poco F6 சிறப்பம்சங்கள்
Poco F6 ஆனது Snapdragon 8s Gen 3 சிப்செட் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது, இது இந்தியாவில் புதிய Qualcomm சிப்பை பேக் செய்யும் முதல் தொலைபேசியாக இருக்கும். ஸ்மார்ட்போன் பிராண்ட் அதன் Poco F6 சாதனம் பயனர்களுக்கு "God speed" வேகத்தை வழங்கும் திறன் கொண்டது என்று உறுதியளிக்கிறது, அதாவது அதிவேக performance உடன் செயல்படும் என்று கூறுகிறது.
Poco F6 ஒரு பெரிய 6.7 இன்ச் 1.5K OLED திரையுடன் வருகிறது. பின்புறத்தில், 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பு உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வழக்கமான 5,000mAh பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை
Poco F6-ஐப் பொறுத்தவரை, இந்தியாவில் இதன் விலை ரூ. 40,000-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“