Poco M3 Launched in India Price, Specification Tamil News : போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் ரூ.10,999 விலையில் அறிமுகப்படுத்தியது போக்கோ நிறுவனம். போக்கோ எம் 2-ன் அடுத்தகட்ட மாடல்தான் போக்கோ எம்3. இது பட்ஜெட் சார்ந்த சாதனமாக இருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், 6 ஜிபி RAM, 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல அம்சங்களை போக்கோ எம்3 கொண்டுள்ளது. இந்தத் தொலைபேசியின் விவரக்குறிப்புகளை முழுமையாக இங்கே பார்க்கலாம்.
போக்கோ எம்3 விவரக்குறிப்புகள்
போக்கோ எம்3, 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரையுடன் 1080 × 2340 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. இதன் ஸ்க்ரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3-ஆல் பாதுகாக்கப்படுகிறது.
ஹூட்டின் கீழ், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் RAM கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC உள்ளது. உள் சேமிப்பை பொறுத்தவரை, 64 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பிடம் அல்லது 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பிடம் உள்ளன. போக்கோ, இந்தியாவில் 6 ஜிபி RAM தரத்தை உருவாக்கியுள்ளது. எனவே, உலகளவில் விற்கப்படும் 4 ஜிபி RAM மாறுபாட்டை நீங்கள் இதில் பெற மாட்டீர்கள்.
கேமரா ஒளியியலைப் பொறுத்தவரை, போக்கோ எம்3 மூன்று பின்புற கேமரா மற்றும் ஒற்றை முன் கேமராவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் ஆட்டோ ஃபோகஸ் (Phase Detection Auto Focus (PDAF)) உடன் 48 எம்.பி, எஃப் / 1.8 பிரதான கேமரா சென்சார் உள்ளது. இதனுடன் 2MP f / 2.4 மேக்ரோ சென்சார் மற்றும் 2MP f / 2.4 டெப்த் சென்சார் உள்ளன. கேமரா அமைப்பு 30fps-ல் 1080p வீடியோக்களை பதிவுசெய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தில் 8MP f / 2.1 கேமரா உள்ளது. இது 1080p வீடியோவை 30fps-ல் பதிவுசெய்யும் திறன் கொண்டது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியும், பாக்சில் 18W ஃபாஸ்ட் சார்ஜரும் உள்ளன. இந்த பேட்டரி ரிவேர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. இன்ஃப்ரா ரெட் போர்ட், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ சைட்-மவுன்ட்டெட் போர்ட் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆகியவை பிற அம்சங்கள். அண்ட்ராய்டு 10-உடன் MIUI 12 உடன் இந்த தொலைபேசி அறிமுகமாகும்.
போக்கோ எம்3, இரண்டு சிம் கார்டுகளுக்கும் ஒரே நேரத்தில் டூவல்-பேண்ட் வைஃபை, டூவல் VoLTE மற்றும் Dual VoWiFi ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும், இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.
விலை
போக்கோ எம்3, கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்தத் தொலைபேசியின் விலை, 6 ஜிபி / 64 ஜிபி வேரியன்ட்டின் விலை ரூ.10,999-ஆகவும், 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999-ஆகவும் இருக்கும்.
பிப்ரவரி 9-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு போக்கோ தொலைபேசியின் முதல் விற்பனையை வழங்கும் மற்றும் ஐசிஐசிஐ வங்கி டெபிட் / கிரெடிட் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியை வழங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Poco m3 launched in india price starting at rs 10999 features tamil news
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை