Advertisment

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் போகோ எக்ஸ் 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

Poco X3 Pro launched in India price specifications இந்தியாவில் போகோ எக்ஸ் 3-ன் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Poco X3 Pro launched in India price sale date full specifications design Tamil News

Poco X3 Pro launched in India price sale date full specifications design Tamil News

Poco X3 Pro launched in India price, specifications Tamil News : போகோ எக்ஸ்3 ப்ரோ கடந்த வாரம் தொடக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்திய போகோ தொலைபேசியின் முக்கிய சிறப்பம்சங்களில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 ப்ராசசர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5,160 எம்ஏஎச் பேட்டரி, 48 எம்பி ஏஐ குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பல உள்ளன. இந்தியாவில் போகோ எக்ஸ் 3-ன் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது. இதனை ப்ளிப்கார்ட் வழியாக வாங்கலாம். புதிய இடைப்பட்ட தொலைபேசியைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ளப் படிக்கவும்.

Advertisment

இந்தியாவில் போகோ எக்ஸ் 3 ப்ரோ விலை, விற்பனை தேதி

போகோ எக்ஸ் 3 ப்ரோ, 6 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.18,999. இந்நிறுவனம், 8 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலையும் விற்பனை செய்கிறது. இதன் விலை ரூ.20,999. போகோ எக்ஸ் 3 ப்ரோ ஏப்ரல் 6-ம் தேதி விற்பனைக்கு வரும். இது கிராஃபைட் பிளாக், கோல்டன் வெண்கலம் மற்றும் நீலம் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும்.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ: முழு விவரக்குறிப்புகள், அம்சங்கள், வடிவமைப்பு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எக்ஸ் 3 ப்ரோ, 6.67 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதம் மற்றும் 450 நிட் பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் HDR10 சான்றிதழையும் கொண்டுள்ளது. இதன் பேனல் கார்னிங் கொரில்லா 6-ஆல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், ஒற்றை பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு மற்றும் பின்புறத்தில் நான்கு கேமராக்களையும் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது, ஸ்னாப்டிராகன் 855-ன் சற்று மேம்பட்ட பாதிப்பு. இது ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7 போன்ற தொலைபேசிகளை இயக்கும்.

ஸ்னாப்டிராகன் 860 அட்ரினோ 640 ஜி.பீ.ஆல்  ஆதரிக்கப்படுகிறது. ஆண்டிராய்டு 11 OS-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 உடன் போகோ எக்ஸ் 3 ப்ரோ வருகிறது. இது 6 ஜிபி டிடிஆர் 4 எக்ஸ் RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM + 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட இரண்டு கட்டமைப்புகளில் வழங்கப்படுகிறது.

இமேஜிங்கிற்காக போகோ எக்ஸ் 3 ப்ரோ, நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. இதில் பி.டி.ஏ.எஃப் உடன் 48 எம்.பி முதன்மை அல்லது கட்டம் கண்டறிதல் ஆட்டோ-ஃபோகஸ் உள்ளது. மேலும் இது, 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருவர் 1080p வீடியோக்களை 60fps மற்றும் 4K 30fps-ல் பதிவு செய்யலாம். முன்பக்கத்தில், 20 எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது.

ஹூட்டின் கீழ் 5,160 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நிறுவனம், 33W ஃபாஸ்ட் சார்ஜருடன் இடைப்பட்ட தொலைபேசியை அனுப்புகிறது. தொகுக்கப்பட்ட சார்ஜர் 59 நிமிடங்களில் சாதனத்தின் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை உயர்த்த முடியும் என்று போகோ கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன், இரட்டை சிம் 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இதில் இருக்கிறது. புதிய போக்கோ தொலைபேசி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐபி 53 மதிப்பீடு, சிறந்த வெப்பக் கரைப்புக்கான லிக்விட் கூல் பிளஸ் தொழில்நுட்பம் மற்றும் குவால்காமின் aptX ஆடியோ தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Poco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment