ஜியாமியின் துணை நிறுவனமான Poco பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல தரப்பட்ட அம்சங்களுடன் போன் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் மிட் ரேஜ் வரிசையில் Poco X5 Pro 5ஜி போன் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலகளாவிய வெளியீட்டில் மாலை 5.30 மணிக்கு போன் அறிமுகப்படுத்தப்படுகிறது. Poco யூடியூப் சேனலிலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
கடந்தாண்டு Poco X4 Pro 18,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் Poco X5 Pro சற்று கூடுதல் விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் Poco X5, Poco X5 Pro என 2 வகை போன்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் Poco X5 Pro மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை, அம்சங்கள்
யூடியூப் ப்ரேமோ விளம்பரங்களின் படி, Poco X5 Pro இந்தியாவில் ரூ.22,999 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2,000 ஆஃபர் வழங்கப்பட்டு ரூ.20,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Poco X5 Pro ஆனது Qualcomm இன் Snapdragon 778G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமிங் போனாகவும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. 3 கேமராக்கள், 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா அமைப்பு கொண்டுள்ளது. மேலும் Poco X5 Pro ஆனது 120Hz ரீபிரஸ் ரெட்டுடன் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய Poco போன் ஸ்லிம் டிசைன் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. 67W பாஃஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகளை Poco X5 Pro கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/