Poco X7 மற்றும் X7 Pro உள்ளிட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட X7 சீரிஸ் போன்கள் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ஜனவரி 9, 2025 அன்று மாலை 5:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பின் பிளிப்கார்ட் தளத்தில் போன்களை வாங்கி கொள்ளலாம்.
Poco X7 ஆனது, MediaTek Dimensity 7300 Ultra chipset இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. ஃபோன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரக்கூடும். இது 1.5K தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, HDR10+ ஆதரவு, TUV ரைன்லேண்ட் கண் பராமரிப்பு சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது.
அதே சமயம், மறுபுறம், Poco X7 Pro, மிகவும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 8400 Ultra சிப்செட் இடம்பெற உள்ளது. இது 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த திரையானது CrystalRez 1.5K தெளிவுத்திறன், 2,560Hz தொடு மாதிரி வீதம் மற்றும் ஈர்க்கக்கூடிய 3,200 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும்.
இரண்டு போன்களும் 20 மெகாபிக்சல் front-facing கேமராவுடன் வருகிறது. வெண்ணிலா மாடல் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,110mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
அதே நேரத்தில் ப்ரோ வெர்ஷன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரி மற்றும் 90W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. போகோ X7 சீரிஸ் போன்கள் முந்தைய X6 சீரிஸ் போலவே மிட்ரேஜ் போனாக ரூ.30,000 விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதது.